பக்கம்:நாகப்பட்டினம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 137

விகாரைகளும் அமைந்தன. ஊர்ப்பகுதியில் சிறு சிறு கோட்டங்கள் அமைந்தன. - இவ்வாறு புகார்ப்பட்டின அமைப்பின் அச்சு வார்ப்புப் போன்றே நாகர்பட்டினநகரம் மூன்றாவது கட்டமாகப் படைக்கப்பட்டது.

ஆயினும் கடல் கோளுக்குப்பின் ஒரு தனியே போன சோழ மன்னன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு அமைந்தான். நாகர்ப்ட்டினம் துறைமுகமாக மட்டும் அமைந்தமையால் அரசர் முதலியோர் வாழ்விடமாகிய அரண்மனை முதலியன அமைய வில்லை. தாலமி பூம்புகார்க்குக் குறித்தமை போன்று நாகூரின் வடக்கில் அரசர் அரண்மனை இருந்ததாகவும் தடயம் ஏதும் இல்லை. பன்னாட்டு நகரம்

ஆனால் தாலமி (கி.பி. 119-161) நாகர்பட்டினத்தைக் கண்டு இதனைப் "பன்னாட்டு நகரம்" (Metropoli Town)என்று சிறப்பித் தார். இதனால் பல்வகை வெளிநாட்டாரும் வந்து போகும் பெரு வணிக நகரமாகவும் திகழ்ந்தது.

பட்டினமாக அமைவதற்கு முன்னர் சிந்தாற்றின் தெற்கே பேரூர் மக்கள் வாழிடத்தை ஒட்டி வெட்ட வெளி இருந்தது. வடக்கே இலந்தை மர மேட்டுநிலம் இருந்தது.

மீன்பிடி பரதவர் குப்பங்கள் கடற்கரையில் அமைவது தொடர்ந்தே வந்தது. -

இவ்வாறாக நாகை, பட்டினநகர அமைப்பாக மூன்றாவது கட்ட வளர்ச்சிபெற்றது. இவ்வமைப்பே பின்னர் விரிவாக்கத்திற்கும் அடித்தளமாக அமைந்தது. இவ்வமைப்பிலும் நகர் நடுவே சிந்தாறு ஒடியதையும் நினைவிற் கொண்டே நகரமைப்பை அக்கண்ணால் கான வேண்டும். தாலமி படத்தின்படி

இக்காலக்கட்டத்தில் நாகர்பட்டினத்திற்கு வந்த தாலமி உரோம அரச குலத்தவர். ஒரு நிலவியல் வல்லுநர். அவ்வல்லுநர் அறிவுடனே தாம் எழுதிய பயண நூலை நிலவியல் நூலாக உருவாக்கினார். அந்நூலில் தாம் கண்ட ஒவ்வொரு குறிப்பிடத்தக்க ஊரும் நகரும் உலகில் எப்பகுதியில் அமைந்தது என்பதை நிலப்படம் மூலம் காட்டியுள்ளார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/155&oldid=585036" இலிருந்து மீள்விக்கப்பட்டது