பக்கம்:நாகப்பட்டினம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 141

பெற்றிருந்ததை இப்புராணங்கள் திரும்பிய ஆற்றை விருத்த காவிரி யாக்கின. -

புராணங்களைக் கொண்டு காலவிதிப்பு செய்ய இயலா தாகையால், "ஆறு ஒன்று விருத்த காவிரி என்னும் பெயர் பெற்று நகரின் மெற்கிலும் தெற்கிலுமாக நகரைச் சூழ்ந்து ஓடியது" என்னும் கருத்தைக் கொள்ளலாம்.

இந்த ஆற்று மாற்றத்தால் நகரின் உட்புறம் அகநகராக வளர்ச்சி பெற்றது. ஆறு ஓடிய வழி தெருக்களாகவும், கரைப்பகுதிகள் இல்லங்களாகவும், வளமனைகளாகவும் விரிவாக்கம் பெற்றன. சமயத்தால் ஆக்கம்

இனி சமயத்தால் நேர்ந்த மாற்றத்தால் நாகை நகரம் இன்றைய நிலைக்கு வளர்த்தது. சமயம் என்பது இங்கு இரு சமயங்களைக் கொண்டது. புத்த சமயத்தின் ஆக்கமும் தேக்கமும், சைவ சமயத்தின் ஆக்கம், வளர்ச்சி, விரிவு என்று சுருக்கிச் சொல்லும் அளவு சைவம் தன் பங்களிப்பை நல்கியது.

முதலில் புத்த சமய ஆக்கத்தைக் காண்போம். பதரி திட்டையாகத் தொடங்கிய புத்த சமயக்களம் காலப் போக்கில் நகரின் விரிவாலும், துறைமுகமானமையாலும் சற்று விரிவடைந்தது. புத்தத் துறவிகளுக்காக அசோகப் பெருமன்னன் எடுத்த ஆதி விகாரை பற்றி அறிந்தோம். பூம்புகாரில் இந்திர விகாரை ஏழும், அதற்கு முன் எடுத்த பல விகாரைகளும் புகார் அழிவால் சிதறுண்டன. அப்புத்தத் துறவிகள் பதிரி திட்டையை நாடினர். நாக நாட்டவர், யாவா நாட்டவர், பர்மியர் முதலிய கீழை நாட்டவரும், இலங்கையரும், சீனரும், வணிகம் கருதி நாகையை நாடி வந்தனர். இன்னோர் அனைவரும் புத்த மதச் சார்பினர். எனவே, இங்கு வழிபடப் புத்த விகாரையை நாடினர். புதிய விகாரைகள் இலந்தை மரமிருந்த இடப்பகுதியில் தோன்றும் இன்றியமையாமை நேர்ந்தது. ஐந்தாம் நூற்றாண்டளவில் இங்கிருந்த சோழ காசபதேவர் ஒர் விகாரையை எழுப்பினார். .لزتئ!ئ நாகானன்' விகாரை எனப்பெற்றது. நாகானனம் என்பது நாகர் இட்ட பெயர். இவ்விகாரைக்கு நாகர் உதவி மிகுதியாக இருந்ததுபோலும். அன்றி நாகர் வழிபாட்டிற்குரியதாகக் கொள்ளப்பட எழுப்பப்பெற்றது போலும். இக்கால ஆட்சியர் களப்பிரரும் புத்தச் சார்பினராயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/159&oldid=585040" இலிருந்து மீள்விக்கப்பட்டது