பக்கம்:நாகப்பட்டினம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நாகபட்டினம்

பொகுட்டைப் (மலரின் மையத்தில் மேடை போன்று அமைந்தது பொகுட்டு) போலத் தோன்றியது காஞ்சி" (17) என்றார். மதுரையைப் பாடும் நல்லழிசியார் என்னும் சங்கப்புலவர்,

"திருமாலின் கொப்பூழில் மலர்ந்த தாமரைப்பூப் போன்றது சீர்மிக்க மதுரை, அத்தாமரைப் பூவின் மையத்திலுள்ள பொகுட்டைப் போன்றது சிவனார் கோயில்; பூ இதழ்களின் வரிசைகள் போன்றன தெருக்கள்: பூவின் தாது (மகரந்தம்) என்னும் மணத்துாள் போன்றவர் நகரத்துக் குடிமக்கள்; அத்தாதை உண்ணும் வண்டுகளைப் போன்றவர் பரிசில் பெறுவோர்" (18) என்றார். கொங்கு வேளிரும் தம் பெருங்கதையில் இராசகிரி என்னும் நகரை (19) இவ்வாறே விவரித்தார்.

இவ்வகை நகரமைப்பை ஆரப்பா, மெகஞ்சதரோ நகரங்களும் திராவிடக் கலை அடையாளங்களாகக் கொண்ட நகரங்கள். இவற்றிற்கும் முந்தையத் தமிழ் நாட்டு நகரங்கள் இவ்வமைப்பைக் கொண்டிருந்தன.

இதற்கு இலக்கியச் சான்றுகளாக மூன்றைக் காட்ட வேண்டும். முன்னிரண்டும் நாட்டு நடப்பின் எழுத்துப் பதிவுகள்: மூன்றாவது பெருங்கதை, கற்பனைக் கதையைக் கொண்டதென்றாலும், நகர வண்ணனை நாட்டு நடப்பை முன்னிரண்டு அறிவித்ததை வண்ணித்ததாகும்; கற்பனை அன்று; முன்னிரண்டின் கருத்தையும் மூலப் படச்சுருளாகக் கொண்டு எடுக்கப்பெற்ற படப் பதிவாகும்.

எனவே பலமுறையில் தமிழ்நாட்டு நகரமைப்பை உறுதி யாக்கவே மூன்று சான்றுகள் அமையும். - மேலை நாட்டு நகரங்கள் உலகில் ஈடு இணையற்ற கட்டடங்களால் சிறப்புற்றிருந்தாலும் தமிழ் மண்ணில் அமைந்த சோலை ஊரமைப்பு தொடக்கமாக நகரமைப்பு தொடர்ச்சியாக இவை முறையான அமைப்புக் கொண்டன அல்ல. இஃது ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/164&oldid=585045" இலிருந்து மீள்விக்கப்பட்டது