பக்கம்:நாகப்பட்டினம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை # 49

துறைமுகத்தையும் காரோணர் கோயிலின் நாற்புறத்தையும் கொண்ட நகர்ப்பகுதி உள்நகர் என்னும் அகநகராயிற்று.

தெற்கில் விருத்த காவிரி எனப்பெற்ற ஆற்றின் வெளிக் கரைப்பகுதியும் மேற்கில் அமைந்த பகுதியும் வடக்கில் காடவர் கோன்பாடி, நாகூர் ஆகியவை அமைந்த பகுதிகளும் 'புறநகர் ஆயிற்று. -

வடக்குக் கோட்டை வாயிலுக்கும் காடவர்கோன்பிடிக்கும் இடையில் அமைந்த புத்தவளாகம், வெளிப்பாளையம் பகுதி 'இடைநகராயிற்று.

உள்நகராம் அந்நகரில் சிவன் கோயில்கள் பல எழுந்து அவற்றில் ஒவ்வொன்றும் நாற்புறமும் விதிகள் அமையப்பெற்றது. இக்காலத்தில் நகரின் தென்மேற்குப் பகுதியில் பெருமாள் கோயில் எழுந்து அதற்கும் சுற்று விதிகள் அமைந்தன. இவ்வகைப் பெருக்கத்தால் சேக்கிழார் பாடியதற்கிணங்க,

"பொற்சுடர் மாளிகைகளும், மகளிர் பந்தாடு தெற்றிகளும் திரைபோல் கரிபரித்தொகை மணிதுகில் சொரியும்" கப்பல்களை யுடைய துறைமுகமும் அமைந்து திருமகட்கு வாழ்திருவிடமாகத் (22) திகழ்ந்தது.

இடைநகராகிய வெளிப்பாளையத்திலும் சிவன் கோயில், சிறு பெருமாள் கோயில் அமைந்து சுற்றுவிதிகள் உரிய அணிகளுடன் நேர்ந்தன.

புறநகரம் நாகர் ஊர் - நாகூரில் பொதுமக்கள் வாழ்ந்ததுடன் மரக்கலம் செலுத்தும் அலுவலர்களாக அமைந்த மரக்கலவரையர்கள் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இடம் பெற்றுக் குடியிருப்புகளை அமைத்து வாழத் தொடங்கினர். மேற்பகுதியில் தமிழ்ப்பெருமக்கள் வாழ்விடம் கொண்டனர்.

இனிக் குறிப்பிடத்தக்க நகர்ச் சிறப்பாக, சுந்தரசோழன், இராசராச சோழன், இராசேந்திரசோழன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அமைந்தவற்றைக் குறிக்க வேண்டும். இராசராசன் காலத்தில் சோழநாடு நில அளவை செய்யப்பட்டபோது நாகையும் அவ்வகையில் இடம் கொண்டது.

கோயிலுக்குப் 让j莓 அறக்கட்டளைகளை நிறுவிச் செப்பேட்டிலும் கல்வெட்டிலும் பதிந்தனர். இவ்வறக்கொடைகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/167&oldid=585048" இலிருந்து மீள்விக்கப்பட்டது