பக்கம்:நாகப்பட்டினம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 173

வில்லை. நன்னூலும் திசைச்சொல்லில் ஒன்றாகக் கொள்ள வில்லை. ஓதும் மொழியாக இருந்தது. காலப்போக்கில் தாம் இடம் பெற்ற நிலத்தில் பேசப்படும் மொழிச் சொற்களுடன் கலந்து பேசப் பட்டது. நாளடைவில் அப்பேச்சு வழக்கும் குறைந்தது. பின்னர் தாம் ஏற்படுத்திக்கொண்ட எழுத்தால் எழுத்து மொழியாயிற்று. அது கருதியே 18 மொழி எனப்பாடிய பாரதியாரும்,

"செப்பும் மொழி பதினெட்டுடையாள்" (10) என்று "பேசும் மொழி" என்று குறித்தார். பாரதி பாடியதும் வடமொழி நீக்கிய 18 மொழிகளையாகும்.

3. புத்தத் துறவியார் அசோகப் பெருமன்னன் புத்த மதத்தை நாடெங்கனும் பரப்ப, புத்தத்துறவிகளை ஆங்காங்கு இறக்குமதி செய்தான். நாகை நகரிலும் ஆதிவிகாரையைக் கட்டுவித்து, தட்சசீலத்துப் புத்தச் சான்றோரைக் குடியமர்த்தினான். முன்னர் நாம் கண்டபடி இலந்தை மரமேட்டு நிலத்தில் உருவான பதரிதிட்டா வளாகத்தில் இத்துறவியர் இடம் பெற்றனர். இவ்விடமன்றி நகர்க்குள் ஒடிய ஆற்றங்கரையில் மாடக் கட்டடம் ஒன்றிலும் அமர்ந்தனர்.

காலப்போக்கில் பிறநாட்டுப் புத்தத்துறவியரும் வந்தமர்ந்தனர். எனினும் பொதுமக்கள் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை. கீழை நாட்டாரும் சீனருமாகிய புத்த மதச் சார்பினர் இவர்களுடன் தொடர்பு கொண்டனர்.

அமைதி நாடி இவ்விடம் வந்த புத்தத் துறவிகள் பயின்றும், ஆய்ந்தும், நூல்கள் எழுதியும் தத்தம் துறவு வாழ்வில் இருந்தனர். நகர்க்கோ, நகர் மக்கட்கோ உதவியோ இடையூறோ இல்லாமல் அளவான தொடர்புடன் அமைதியில் இருந்தனர்.

இத்துறவிகட்குக் கீழை நாட்டில் சாவகம் (யாவா), சுமத்திரா மன்னர்களுடனும் மக்களுடனும் தொடர்புகள் இருந்தன. காஞ்சியி லிருந்து வந்த தன்மபாலர் முதலிய பல துறவியர் இவ்வளாகம் வந்து நாகைத் துறை வழியாகவே கீழை நாடுகளுக்குச் சென்றனர். நாகை யைப் பொறுத்தவரை இந்நிலத்தில் வாழ்ந்தனரே அன்றி நகர்த் தொடர்பில் புளியம்பழமும் அதன் ஒடுமாகவே இருந்தனர். 17ஆம் நூற்றாண்டுவரை இடம் பெற்றிருந்த இத்துறவியர் 19ஆம் நூற்றாண்டில் நாகையில் ஒரு நிலைத்த தடயம் இல்லாத அளவில் மறைந்தனர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/191&oldid=585072" இலிருந்து மீள்விக்கப்பட்டது