பக்கம்:நாகப்பட்டினம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 179

சோழனுடன் மாறுபட்டதால் இராசராசன் தன் மகன் இராசேந் திரனைக் கப்பற்படையுடன் அனுப்பிப் போரிடச் செய்தான். இராசேந்திரன் சுமத்திராவில் உள்ள துறைமுகமாகிய கடாரம் என்னும் பட்டினத்தைக் கைப்பற்றினான். இவ்வெற்றியின் அறிகுறி யாக இங்கு 'கடாரம் கொண்டான்' என்றொரு ஊருக்குப் பெயரிட் டான். நாகை திருவாரூர்ச் சாலையில் இவ்வூர் உள்ளது. வென்ற இராசேந்திரன் வரும் வழியில் மலேயாவில் தங்கினான். தங்கிய படைத்தளத்திற்குத் தன் வெற்றியின் அறிகுறியாகக் கெடா என்று பெயரிட்டான். இன்றும் மலேயாவில் கெடா உள்ளது.

இவ்வெற்றி அவனது கல்வெட்டில், "தொடுகடற் காவற் கடுமுரண் கடாரமும்" (14) என்றுள்ளது. இதனைக் கொண்டு கடாரத்தார் கடுமையாக முரண்பட்டவர், முரட்டுக் குணத்தவர் என்றறிய முடிகிறது. 'கடாரம் என்பது கடற்கரைக் காவல்பட்டினம் என்பதையும் உணரலாம். பர்மியர் முரண்பட்டவரல்லர். மென்மைக் குணத்தவர். எனவே, சுமத்திரா வின் கடற்கரைப்போரே கடாரப் போர் ஆகும். கடாரம் என்னும் கடற்

கரைப் பட்டினம் சுமத்திராவில் உள்ளது.

காழகக் கிராமம்

இக்கடாரத்திலிருந்து தமிழகத்தில் வணிகம் சங்ககாலத்தில் நிகழ்ந்தது. சங்க இலக்கியங்களில் 'கடாரம் என்றும் சொல் இல்லை. ஆனால் கடாரத்தைக் குறிக்கக் காழகம் என்னும் சொல் பட்டினப் பாலையில் உள்ளது. பிற இலக்கியங்களில் காழகம் என்பது ஆடையைக் குறிக்கும். பூம்புகார் நகரில் இறக்குமதியான பல்வகைப் பண்டங்களையும் குறிக்கும் உருத்திரங்கண்ணனார்,

"காழகத்து ஆக்கமும்" (15) என்று குறித்தார். இதனை விளக்கிய நச்சினார்க்கினியர், "கடாரத்தில் உண்டான நுகரும் பொருள்களும்" என்று எழுதினார். உண்மையாகவே சுமத்திராவின் விளைபொருள் களாகிய தேயிலை, காப்பிக்கொட்டை, இலவங்கப்படை, இலவங்கம் என்னும் கிராம்பு முதலிய பொருள்கள் உணவாக நுகரப்படும் பொருள்கள். இவை இறக்குமதியாயின.

எனவே யாவா என்னும் சாவக நாட்டு மக்களுடன் அவரைச் சார்ந்த கடாரத்தாராகிய சுமத்திரா மக்களும் நாகை நகரில் வணிகத் தொடர்பாலும், புத்தத் தொடர்பாலும் இடம் பெற்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/197&oldid=585078" இலிருந்து மீள்விக்கப்பட்டது