பக்கம்:நாகப்பட்டினம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፬ 80 நாகபட்டினம்

அவர் நாட்டில் மற்றொரு வகையில் தமிழகம் பொருந்துகிறது. அங்குத் தமிழ் இலக்கண முனிவர் அகத்தியருக்கு வழிபாடு உண்டு; கோயிலும் உள்ளது. சுமத்திரர் நாகையில் இருந்ததன் அடையாளம் ஏதும் இக்காலத்தில் இல்லை. எனினும், அவர் நாட்டுக் கிராம்பும், இலவங்கப் பட்டையும் உணவிலும் மருந்திலும் நின்று நினை வுறுத்திக் கொண்டுள்ளன. யாவா மொழி -

சுமத்திரா மக்களாம் கடாரத்தாரின் மொழி மலாய் மொழியின் தொடர்புடையது. மலாய்மொழியின் வழிவந்தது என்றும் கருதுவர். அம்மொழியின் ஒலி புத்த வளாகத்தில் ஒலித்து நகர வணிகர் களிடமும் உரையில் நின்றது.

8. சீனத்து மக்கள்

சீன நாட்டார் வணிகம் கருதித் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அவர்தம் வருகை நிலவழியாகப் பர்மாவை அடைந்து, கடல் வழியாகச் சுமத்திரா, யாவா சென்று அங்கிருந்து இலங்கை வந்து நாகையை நாடி நடந்ததாகும்.

இலங்கை அசோகர் காலத்தில் புத்தத் திருவிடமாகப் பெருகிற்று. சீனநாட்டிலும் புத்தம் கவர்ச்சியுடன் தொடங்கப்பட்ட காலம். வணிக நோக்குடன், இலங்கையில் புத்தரது பல் இருந்தமையால் அதனைக் கண்டு வழிபடும் உணர்வும் கலந்தது. அங்கிருந்து நாகைப் பயணம் வணிக நோக்கிலும் புத்த உணர்விலும் அமைந்தது.

இத்தொடர்பு தொடங்கிய காலம் எது? அறுதியிட்டு எழுத இயலவில்லை. கிடைத்துள்ள ஒரு சான்றின்படி ஏழாம் நூற்றாண்டு முன்வருகிறது. முதல் நரசிம்ம வர்மன் காலத்தில் நாகை வந்தவர் சீனப் பயணி யுவான் சிங் (Yin - Sing) என்பவர். எனவே கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சீனர் குறிப்பு தெரிகிறது. நாகையில் சீனக் கல்வெட்டு

அடுத்து இரண்டாம் நரசிம்மன் காலத்தில் கி.பி. 720 இல் சீன அரசன் ஒருவன் வேண்டியபடி இரண்டாம் நரசிம்மனால் நாகைப் புத்த வளாகத்தில் ஒரு புத்தக் கோபுரம் எழுப்பப்பட்டது. அதற்கு என்ன பெயரிடுவது என்று சீன மன்னனைக் கேட்க அவன் மேலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/198&oldid=585079" இலிருந்து மீள்விக்கப்பட்டது