பக்கம்:நாகப்பட்டினம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 183

நாகை நகரில் வணிகம் கருதியே உலவினர் உரோமர். நாகையில் அவ்வப்போது உரோம நாணயங்கள் கிடைத்துள்ளன. அவர்கள் கடற்கரையில் பண்டசாலை அமைக்கும் பழக்கத்தினர். அவ்வகையில் நாகைக் கடற்கரைச்சாலையில் பண்டசாலை அமைந்திருக்க வேண்டும். தமிழகத்திலிருந்து மிளகு, முத்து, சங்குகளைத் தம் நாட்டிற்கு வாங்கிச் சென்றனர். நாகூர்த் துறைமுகத்திலும் முத்து ஏற்றுமதி நடந்துள்ளது. எனவே முத்து, சங்குகளைப் பெற்றுச் செல்லும் வணிகத்தைச் செய்துள்ளனர். உரோமில் திருநள்ளாறு

தமிழகத்தில் சனி பகவானுக்காக நாகைக்கு அண்மையில் உள்ள திருநள்ளாற்றில் தனிக் கோயில் உள்ளது. உரோம நகரில் இரண்டடுக்கு மாடம் கொண்ட பெரிய சனிபகவான் கோயில் மிகப்பழையதாக இன்றும் இடிபாடுகளுடன் உள்ளதை இங்கு நினைவிற் கொள்ளலாம்.

எனவே, நாகையில் உரோமர் வணிகர் என்ற அளவில் இருந்தனர் என்றாகின்றது. இலத்தீன் மொழி

உரோமரது மொழி இலத்தீன். அவர்தம் மத மொழியுமாகும். வணிகப் பண்டசாலைகளிலும் இம் மொழி ஒலித்தது. ஆலந்து ஆளுநர் மனைவி, குழந்தைகளின் தொகுதியாக நாகையில் உள்ள கல்லறை முன்னர் விளக்கப்பட்டது. அக்கல்லறை மேல் பாறைக் கல்வெட்டின் தலைப்பு இலத்தீன் மொழியில் அமைந்தது. இன்றும் இலத்தீன் எழுத்தில் காட்சியளித்துக் கொண்டுள்ளது.

10. தெலுங்கு மக்கள்

நாகை நகர் பெரும் வணிக நகராக வளஞ் சூழ்ந்திருந்த போது வாழ்வு நாடித் தமிழகத்தைச் சூழ்ந்த நாட்டு மக்கள் நாகைக்கு வந்தனர். வந்தோர் நாகை நகரைச் சுற்றி, தெற்கு மேற்கு வடக்காக நக வளைவில் சேர்ந்து வாழ்ந்தனர். அவ்வவ்வினத்தார் பெயரில் அவ்வவ்வூர் சேரி எனப் பெயர் பெற்றுள்ளது. அவற்றில் ஒன்று வடுகர்சேரி. இப்போது வடுகச்சேரி எனப்படுகிறது. இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/201&oldid=585082" இலிருந்து மீள்விக்கப்பட்டது