பக்கம்:நாகப்பட்டினம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நாகபட்டினம்

வாழ்வோர் வேளாண் மக்கள். வாழ்வு கருதியும், வணிகம் கருதியும் நகர்க்குள் வந்து செல்வர் நகரிலும் தங்கினர்.

இன்னார் பேசும் மொழி தெலுங்கு. உண்மையில் இன்னார் தெலுங்கரே. -

வடுகர்

சங்க இலக்கியங்களில் வடுகர் என்றோர் இனத்தார் குறிக்கப்படுகின்றனர். அன்னார் பம்பையடித்து முழக்குவர்; சினங்கொண்ட நாயை உடையவர்: முரண்பட்டவர்; கஞ்சங் கோரையைத் தலையில் சூடுபவர் கல்லா மாக்கள் என அவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். அவருள் இந்நாள் இங்கு வாழும் மக்கள் வேறானவர்; நயமானவர்; நல்லவர்; கற்றவர்.

நாகை வடுவர் தெலுங்கு மொழியாளர், திராவிட இனத்தவர். தெலுங்கு மொழி ஆறாம் நூற்றாண்டளவில்தான் உருப்பெற்றது. சங்க கால வடுகர் எனப்பட்டவர், கொச்சையான வடமொழி ஒன்றைப் பேசினர். அன்னார் தமிழ்ப் பேச்சு பேசியதில் மிகுந்த வடசொற்களும் கலந்து தெலுங்காயிற்று. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர், பதினெட்டு நிலங்களைச் சொல்லும் போது "வடுகும் தெலுங்கும்" என்று வெவ்வேறாகவே காட்டியுள்ளார்.

பின் எவ்வாறு தெலுங்கர் வடுகரானார். வடுகு என்றால் வடக்கு என்று பொருள், குடம் என்றால் மேற்கு மேற்கே அமைந்த மலைநாடு குடகம் எனப்பட்டதுபோன்று தமிழகத்தை ஒட்டிய அண்டை வடபகுதி நிலம் வடுகு எனப்பட்டது. அங்கு உருவான தெலுங்கரும் வடுகர் எனப்பெற்றனர்.

16ஆம் நூற்றாண்டில் கிருட்டிணதேவராயர் காலத்தில்தான் தெலுங்கு பேசும் மக்கள் நாகைப் பகுதிக்கு வந்தனர். சுற்றியிருந்த சேரியில் வாழ்ந்தோர் நகர்க்குள்ளும் வாழ வந்தனர். தெலுங்கு மொழி

இவ்வடுகர் எனப்படும் தெலுங்கர் தம்முள் குடிமொழியாகத் தெலுங்கைக் கொண்டவர். தம் இல்லத்திலும் தம் குடியாரோடும் தெலுங்கில் உரையாடுவர். பொதுவில் தமிழிலே பேசுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/202&oldid=585083" இலிருந்து மீள்விக்கப்பட்டது