பக்கம்:நாகப்பட்டினம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 1 95

தொடர்ந்து வழங்குதலாகிய மகமை வழங்க இசைந்தமை குறிக்கப்பட்டுள்ளது. இவ்விருவரும் நாகைத் துறைமுகத்தில் ஏற்று மதிப்பொருளில் கண்டி (ஒரு அளவை) 100 இற்கு 1 வராகன் என்றும், இறக்குமதிப் பொருளில் கண்டி 100 இற்கு 2 வராகன் என்றும் பிற பொருள்களில் 1/2 வராகன் என்றும் மகமை வழங்க இசைந்தமை பதிவாகியுள்ளது.

நாகையில் வாழ்ந்த பெருவணிகர் திருமேனி செட்டியாரின் அறச்செயல்களைப் போற்றிய நாகைத் தமிழர் அவர் வாழ்ந்த தெருவிற்குத் "திருமேனி செட்டித்தெரு" என்ற பெயரிட்டு இன்றும் வழங்கி வருகின்றனர். இதுபோன்றே மார்க்கண்ட செட்டித்தெரு: உள்ளது. வடநாடு போய்த் திரும்பி வந்த மீனவ குலச் செட்டி ஒருவரைப் பெருமைப்படுத்திக் கடற்கரையில் ஒரு பகுதி ஆரிய நாட்டுச் செட்டித்தெரு' என்று வழங்கப் பெறுகின்றது. மீனவரில் ஒரு பகுதியாளரும் செட்டிப்பட்டம் கொண்டவராவர். தருமலிங்கம் செட்டி

"யாரையும் வாழ்தரத் தீாங்கும்" நாகை என்றதற்கு இலக்கியமாக ஒரு செட்டியார் பெருந்தகை நாகையில் விளங்கினார். அவர் பெயர் தருமலிங்கம் செட்டியார்.

தஞ்சையை ஆண்ட விசயராகவ நாயக்கரின் பெயரனும் மன்னாரு நாயக்கரின் மகனுமானவன் திருவளர் செங்கமலதாசு. இவன் சிறுவனாயிருக்கும்போது பீசப்பூர் சுல்தான் ஆள்கள் இவனைத் தீர்த்துக்கட்டத் தேடினர். தஞ்சையிலிருந்து இச்சிறுவன் தப்பி நாகைக்கு வந்தான். நாகைத் தருமலிங்கம் செட்டியார் இவனை ஏற்றுத் தம் பாதுகாப்பில் வைத்திருந்து நாயக்க அரசன் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். இச் செங்கமலதாசு பின்னர் மராத்திய ஏகோசி வழங்கிய பொறுப்பால் தஞ்சை ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்டான்.

நாகைத் தருமலிங்கம் செட்டியார் தம் பெயருக்கு ஏற்பத் தர்ம - அறத்தின் இலிங்கம் - திருவுருவாய்ச் சிறப்புற்றவர் ஆனார். சமயம் சார்ந்த பெருமக்கள்

சமயத்தின் தனியொரு சிறப்புடையவராக நாகை மக்களில் குறிக்கப்பட்டவர் அதிபத்தர். இவர் சைவ சமய நாயனார். 63 சைவ நாயன்மாருள் ஒருவர். மீனவ குலத்தினர். அவர் வாழ்ந்த நாகை குப்பப்பகுதி மக்களின் தலைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/213&oldid=585094" இலிருந்து மீள்விக்கப்பட்டது