பக்கம்:நாகப்பட்டினம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 19?

"பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர் காணும் கடல்நாகைக் காரோணத்தானே" என்று நாகையில் சைவத் தொண்டர்கள் காணப்பட்டதைக் குறித்தார். அன்னார் சைவ நெறிப் பேணிக் காத்தவர்; சில வழிபாட்டை நாளும் மேற் கொண்டவர்; அதை என்றும் பிரியாதவர்: சைவத்தொண்டிற்கு எழுந்தனர் என்றெல்லாம் நமக்குக் காட்டியுள்ளார்.

அவர் கூற்றின்படி நாகையில் நல்லாரும், பொல்லாரும் அயலாரும் இருந்ததை, o

"நல்லார் அறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற அல்லார் அலர்துாற்ற அடியார்க் கருள்செய்வான்" (25) என்று பாடிக் காட்டியுள்ளார். இதனை ஒரு நோக்கில் சிறப்பாகவும் மறு நோக்கில் பொதுவாகவும் காணலாம்.

நல்லார் - சைவத்தார் பொல்லார் - புத்தத் துறவியர் அல்லார் - நாகையில் அல்லாதவராகிய சமணர் எனலாம். ஆயினும் சைவ அடியார்க்குக் காரோணத்தார் அருள்வார் என்றார்.

பொதுநோக்கில் நாகையில் நல்லவரும் இருந்தனர். பொல்லாதவரும் இருந்தனர்; தமிழர் அல்லாதவரும் இருந்தனர். கடுக்காய் ஊட்டச்சத்தும் மருந்தும் ஆவது. அதன் கொட்டையோ நஞ்சு, இஞ்சி உணவில் நல்ல சுவையேற்றி உடலையும் தேற்றுவது. அதன் தோல் நஞ்சு. "கடுக்காய்க்கு அகத்திலும், இஞ்சிக்குப் புறத்திலும் நஞ்சு" என்பது மருத்துவப் பழமொழி. கொட்டையில்லாக் கடுக்காயும் இல்லை; தோல் இல்லா இஞ்சியும் இல்லை அன்றோ! -

19, 20 ஆம் நூற்றாண்டளவில் நாகையில் பல சைவப் பெரு மக்கள் சான்றோராக வாழ்ந்தனர். சைவத்திரு சோ. வீரப்பச் செட்டியார் வேதாகமம் பயின்று சைவசித்தாந்தம் கொண்டவர். இங்கு அலுவலராக வந்தடைந்த திரு மதுரை நாயகம் பிள்ளை சைவத்தில் ஊறி வெளிவையில் 'சைவசித்தாந்தச்சபை கண்டவர்.

நாகை சைவச் சான்றோர் நிறைந்த நகரம் எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/215&oldid=585096" இலிருந்து மீள்விக்கப்பட்டது