பக்கம்:நாகப்பட்டினம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 {}6 நாகபட்டினம்

திரு. வே.ப. கா காயாரோகணம் பிள்ளை 12.11.1934 - 31.3.1938.'

காயாரோகணம் பிள்ளை திரு கே.ப. பக்கிரிசாமி பிள்ளை. மகனார். இவர்கள் இல்லத்தில் பனகல் அரசர், பொப்பிலி அரசர், சர். தியாகராயர், டாக்டர் நடேசன் ஆகிய நீதிக்கட்சிச் சான்றோரது படங்கள் அமைந்துள்ளன.

இன்னோர் அனைவரும் பெருஞ்செல்வர்; தாழ்விலாச் செல்வர்; தாழ்விலா எளியவர். இருவரும் நகராட்சித் தலைவராக இருந்தனர். ஒருவர் வாழும் திரு. சு. மா. அரங்கசாமி. இவர் ஒர் எளிய பூக்கடைக்காரர். மற்றவர் திரு ஈசுவரி, இருவரும் தி.மு.க.வினர். எளியோரான தக்கார் இருவர் பிற பல எளிய பெருமக்களுக்கும் சான்று ஆவர். ஏனையப் பெருமக்கள் பலரும் நகராட்சித் தலைவராக இருந்தனர். மா. சிங்காரவேலர்

நகராட்சித் தலைவர் என்னும் சுற்றுக்கோட்டில் அல்லாமல் நாகையை அணிசெய்தோர் மிகப்பலர்.

சுருக்கமாகக் குறிப்பிடத்தக்க பல்வகையான சிலர் பின்வரு வோர்

"போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி" என்றும்

"சிங்கார வேலரைப் போலச் சிந்தனைச் சிற்பி

எங்கேனும் கண்டதுண்டோ" என்றும் பாவேந்தர் பாரதி தாசனால் பாடப்பெற்ற அவர்தம் நண்பர் திரு மா. சிங்காரவேலர் குறிப்பாகக் குறிக்கத்தக்கவர். இவர் பாரதியார்க்கும் பெரியார் ஈ.வே.இரா. அவர்கட்கும் நண்பர். தொழிற்சங்கங்களைத் தோற்று வித்துப் பெரும் போராட்டப்புரட்சி செய்து 1924இல் கான்பூர் சதி வழக்கில் ஆட்பட்டவர். இந்தியா முழுமையும் புகழ்பெற்றவர். 1933 இல் சென்னை ஒயிட்சு நினைவுக்கூட த்தில் முதன்முதலாகநாத்திக மாநாட்டைக் கூட்டியவர்.

1. நகராட்சித் தலைவர்கள் விவரத்தைப் பெற்று வழங்கியவர் திரு. கோ. சண்முகவேலு அவர்கள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/224&oldid=585105" இலிருந்து மீள்விக்கப்பட்டது