பக்கம்:நாகப்பட்டினம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 209

நாகூரில் அடக்கமான இசுலாமிய ஆன்மீகத் திருமகனார் அசரத் காதிறு அவர்களை நாகூர் ஆண்டவர் என்று போற்றுகின்றனர். அவரடக்கமான தர்கா பீடுற்று நினைவுச் சின்னமாக அமைந்தமை நாடறிந்து போற்றும் சமயச் சின்னமாகும்.

நாகை குமரக் கடவுள் மீது திறப்புகழ்' என்னும் இலக்கியம் பாடிய அழகுமுத்துப் புலவரின் திருவுருவம் நாகைக் குமரக் கடவுள் கோயிலின் வழிபாட்டுத் தெய்வமாகவே கருதப்பட்டுள்ளது.

இக்கோயில் உருவாக முனைந்து துணை நின்ற பாண்டிச்சேரி திரு ஆனந்தரங்கம் பிள்ளையவர்களது உருவச் சிலையும் இக்கோயிலில் அமைக்கப்பெற்றுத் திகழ்கிறது.

முன்னர் நாகைக் கல்லறைத் தோட்டத்தில் கண்ட கல்லறை மண்டபம், ஆலந்துப் பெருமாட்டியுடன் அவர்தம் செல்வங்களின் நினைவுக் கலை மண்டபமாக நிற்கிறது. -

ஆலந்தர் காலத்துக் கொடிமரத்து மேடையும், புதுக் கிறித்துவக் கோயிலில் அமைக்கப் பெற்றுள்ள ஆலந்துப் பெருமாட்டியின் மரச்சிற்பமும் காணத்தக்கவை.

நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார்க்கு நாகை மக்கள் நாகைத் தமிழ்ச் சங்கத்தின் வழியாக எடுத்துள்ள முழு வெண்கலச்சிலை நாகை புகைவண்டி நிலைய முகப்பில் பெருமிதக் காட்சி தருகிறது.

புகை வண்டி நிலையத்தின் உள்ளே "நிறை தமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார் பிறந்த நகரம்" என்று அறிவிக்கும் வார்ப்புப் பாளம் தமிழ்ப் பெருமகனார்க்குப் புகை வண்டித் துறையார் சேர்த்த பெருமையாகும். -

நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார் பெயரில் இரண்டு புறநகர்ப் பகுதிகள் மறைமலை நகர் என்னும் பெயரில் அரசு ஊழியர், மக்கள் குடியமைவுகளாக உருவாகியுள்ளன.

அண்ணல் காந்தியடிகளின் அமர்ந்த தோற்றச் சிலை ஒன்று நாகை அபிராமியம்மன் கோயில் திருமுன் நிறுவப்பட்டு அண்ணலை நினைவுறுத்திக் கொண்டுள்ளது.

அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களது சிலைகள் முறையே நாகை நகர் நுழைவாயிலான புத்துளரிலும், மேலைக் கோட்டை 「らrr.15.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/227&oldid=585108" இலிருந்து மீள்விக்கப்பட்டது