பக்கம்:நாகப்பட்டினம்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 2 : 5

என்று வேண்டினார். இந்தியாவில் மதமெனும் பேய் பிடித்தோர் முன்னாளிலும் இருந்தனர்; இந்நாளிலும் தோன்றியுள்ளனர்.

உலகில் சமயங்கள் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கில்

உள்ளன. அனைத்தும் மாந்தரால் அமைக்கப்பட்டனவே. பலவற்றைச் சமைத்தவரை அறிகிறோம். ஒன்றிரண்டு, சமைத்த முதல்வரை அறிய முடியாமல் உள்ளன. நாகையில் சமயங்கள்

நாகை மண்ணில் புகுந்து அமர்ந்த சமயங்களைக் கால வரிசையில் குறித்தால், -

புத்தம் -

சைவம் -

திருமாலியம் (வைணவம்) -

இசுலாமியம் -

கிறித்துவம் - என அமையும்.

இந்தியாவில் பழஞ்சமயங்களில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது சமணம். தமிழ் மண்ணில் அது பரவியிருந்தது. தமிழுக்கும் தன் பங்களிப்பைச் செய்தது. நாகை மண்ணில் அது கால் வைக்க வில்லை. நாகையைச் சுற்றியுள்ள திருப்புகலூர், நந்திபுரம், திருநாகேசுவரம், திருவாரூர் ஆகிய ஊர்களில் இடம் பெற்ற சமணம் நாகையில் இடம் பெறவில்லை. எனவே பழஞ் சமயமாகிய சமணத்திற்கும் நாகைக்கும் தொடர்பில்லை.

ஆ. புத்தம் - விளக்கம்

நாகை மண்ணில் முதன்முதலில் இடம் பெற்றது புத்த சமயமே. இது புத்தரால் அமைக்கப்பட்டது. அமைதி நாடிய புத்தத் துறவிகள் இங்கிருந்த இலந்தைமர மேட்டில் அமைந்ததை அறிந்தோம். புத்தர் பெற்ற மெய்யறிவு ஒளியால் கொள்ளப்பட்ட ஞானம், "துன்பம், துன்பத்திற்குக் கரணியம், துன்பப்போக்கு வீடு, துன்பப்போக்கு வீட்டிற்கு வழி" என்னும் நான்கினைக் கோட்பாடுகளாகக் கொண்டது. -

"ஆன்மா என்று ஒன்று இல்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/233&oldid=585114" இலிருந்து மீள்விக்கப்பட்டது