பக்கம்:நாகப்பட்டினம்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257

6. அழகர் கோயில் "அழகர்" என்றதும் திருமாலின் கோலந்தான் நினைவில் வரும். இந்த அழகர் கோயிலோ சிவன் கோயில். அழகிழந்த அழகருக்கு இங்கு அழகை அருளியதால் சிவனார் அழகப்பர் - அழகநாதர் என்று பெயர் பெற்றார். * * -

அழகு தந்த அழகர்

பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி கக்கிய நஞ்சின் வெப்பம் அனைவரையும் கருகச் செய்தது. பள்ளி கொண்டிருந்த திருமாலும் உடல் கருகினார். அதைப்போக்கச் சிவபெருமானை வேண்டினார். அவர் அருளியபடி நாகை வந்து காரோணர் முதலியோரை வழிபட்டு நடுவர் கோயிலுக்குத் தெற்கில் ஓரிடத்தில் அருவுருவத்தினை நிறுவி வழிபட்டார். சிவபெருமான் தோன்றிக் கருகிய கோலத்தை நீக்கி முன்னையிலும் அழகாக்கினார். அழகாக்கியதால் அவ்விலிங்கத்தில் அமர்ந்து அழகர் என்று போற்றப்பெற்றார். அம்மையார் அழகம்மை

ulmööTTTír. - -

இக்கோயில் ஒரு திருச்சுற்றுள்ள கோயில்; கற்கோயில். அணுக்கத் திருவுருவங்கள் உள்ளன. கோயிலின் பின்புறம் அமுத புட்கரணி என்னும் திருக்குளம் உள்ளது. கோயிலின் தெற்கில் சாரபுட்கரணி என்னும் திருக்குளம் உள்ளது.

அழகுக்கு அரசன் என்னும் பொருளில் செளந்தரராசன் என்றும், அழகர் துணைவி என்னும் பொருளில் செளந்தர்ய நாயகி என்றும் வடமொழி ஆக்கமும் ஆயின. மாறுபட்ட மதிப்பு - -

திருமண் (நாமம்)ணுக்குரிய திருமால் திருநீறு பூசி, கவுத்துவமணியணிந்த மாலவர் சிவக்கண்மணி (உருத்திராக்கம்) அணிந்து, எட்டெழுத்துக்குரிய (நாராயணாயநமக) அவர் ஐந்தெழுத்தை (நமசிவாய) ஓதி, துளசிக்குரிய அவர் கொன்றை மலர் கொண்டு வழிபட்டமை இக்கோயிலின் சிறப்புச் செய்தி எனலாம்; மாறுபட்டவை மதிக்கப்பட்டன.

7. வீரபத்திரர் கோயில்

அழகர் கோயிலின் கிழக்கில் தெற்குமுக வாயில் கொண்ட வீர பத்திரர் கோயில் உள்ளது. இக்கோயிலமைந்த தெரு, வீரபத்திரசாமி கோயில் தெரு என்றுள்ளது. தக்கன் வேள்வியை அழிக்க 「Brr.18 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/275&oldid=585156" இலிருந்து மீள்விக்கப்பட்டது