பக்கம்:நாகப்பட்டினம்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 நாகபட்டினம்

சிவபெருமானின் ஒரு சடை மோதலில் தோன்றியவர் வீரபத்திரர், தன்னுடன் தக்கன் வேள்வியை அழித்த வீரமாகாளியுடன் இங்கு வீற்றுள்ளார்.

ஒரு சிறிய அரச கோபுரத்துடன் சுற்று மதில்களைக் கொண்ட அளவான கோயில் இது. இதன் பின்புறத்தே ஒடிய சிந்தாற்றுக் கரையில் புத்தத்துறவியர் வாழ்ந்த இடம் இருந்தது. இங்கிருந்தும் புத்தர் வெண்கலச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. . 8. அகத்தியப்பர் கோயில்

х (வெளிப்பாளையம்) தமிழ் அகத்தியன் தொடர்புள்ள கோயில் இது. தமிழுடன் வடமொழியும் இணைந்து அகத்தீசுவரர் கோயில் எனப்படுவது. நாகைக் கரையில் கடலைக் குடித்தார்

சிவ பார்வதி திருமணக்கூட்டத்தால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்ததைச் சமப்படுத்தச் சிவபெருமானால் அனுப்பப் பெற்ற அகத் தியர் தம்மைத் தடுத்த விந்தத்தை அடக்கிய கதையை அறிவோம். அவர் காரோணம் வந்தார். வெளிப்பாளையத்தில் தாம் ஒரு அருட்குறி அமைத்து வழிபட்டார். அரக்கர் வானவர் போரில் தோற்ற அரக்கர் கடலுள் மறைந்தனர். அகத்தியர் நாகைக் கரையில் கடலை ஒரு கையில் அடக்கிக் குடித்தார். அரக்கர் அழிபட, தாம் நாட்டிய கோயிலில் வழிபாடாற்றிப் பொதியம் சென்றார் என்கிறது புராணம். அவர் பெயரால் அகத்தியப்பர் கோயிலாக உள்ள சிற்றளவுக் கோயில் இது. அரச கோபுரத்துடன் இன்றியமையாத அணுக்கத் தெய்வங்களைப் பெற்றுள்ள கோயில்; திருச்சுற்றையும் மடவளாகங் களையும், திருக்குளத்தையும் கொண்ட அழகிய கோயில்.

9. புன்னாகக் காட்டப்பர் கோயில்

(நாகூர்) நாகூரில் ஒரு சிவன் கோயில் உள்ளது. இது மட வளாகங்களைக் கொண்ட அளவான கோயில்; அரச கோபுரமும் திருச்சுற்றும் கொண்டது.

புன்னைமர நிழலில் எழுப்பப்பெற்ற அருட்குறிக்கு எழுந்த கோயிலாதலால் இது புன்னாக வனநாதர் கோயில் என்று பெயர் பெற்றது. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/276&oldid=585157" இலிருந்து மீள்விக்கப்பட்டது