பக்கம்:நாகப்பட்டினம்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 279

பின் ஒருமுறை நாகூருக்கு வந்த பிரதாயசிங் வழியில் வடயரங்குடிக்கு அண்மையில் பாவா சாகேபின் தர்கா, மண்டபம் இவை பற்றிய வேண்டுகோளை ஏற்றுத் தீவா நகரப் பேட்டைச் சங்கத்திலிருந்து ஒரு காசு வீதம் மகமையாக அளக்க ஆணையிட்டான்.

பிரதாபின் மகன் இரண்டாவது துளசா மன்னன் தர்கா செலவிற்குத் தட்டுப்பாடு நேர்ந்ததை அறிந்து பின்வரும் 15 ஊர்களின் வருவாயை நல்கையாக வழங்கினான். அவை நெடுங்காட்டாங்குடி, வடகுடி, சோழாங்க நல்லூர், குறும்பேரி, ஆழியூர், கடம்பர் வாழ்க்கை, நாங்குடி, சராங்கு தருக்கண்ணங்குடி, புலியூர், இளங்கடம்பனூர், குடன்வெற்றி வாழ்க்கை, புல்லூர், தெத்தி, மேலை நாகூர் ஆகியவை. இந்நல்கையை ஒரு செப்புப் பட்டயத்தில் பதிந்து தர்காவில் அமைத்தான். அப்பட்டயம் சிக்தா என்னும் பெயரில் தர்காவில் உள்ளது. இவற்றின் வருவாயால் ஆண்டவர் வழியினராக நாகூரில் வாழும் 640 பங்குதாரர் பயன் பெறுகின்றனர்.

ஆண்டவர்ட்மிதியடிகள்

இத்துயவர் அடக்கமான கருவறை வெள்ளிக் கதவுகளால்

அமைக்கப் பெற்றது. கருவறையுள் அவர் பயன்படுத்திய மிதியடிகள்

பேணப்பெறுகின்றன. அடியவர் காட்சிக்கும் வாழ்த்துக்கும் பயன்படுத்தப் பெறுகின்றன. இக்கருவறை மிகத் தூய முறையில் பேணப்படுகின்றது. இதன் பின் அமைந்த வடக்குப் புற வாயில் தலைமாட்டு வாயிலாக அதைத் தொடரும் தெரு தலைமாட்டுதெரு : எனப்படுகின்றது. இதுபோன்றே தெற்குப் புற வாயில் கால்மாட்டு வயிலாக அதைத் தொடரும் தெரு 'கால்மாட்டுத் தெரு' எனப்படுகின்றது.

ஆண்டவர் தொடர்பில் வாஞ்சூர்ப்பள்ளி, யாகூசன் பள்ளி, பீர் மண்டபம் உள்ளன.

கந்தூரி விழா

இவ்வமைப்புக்களால் பொலிவுற்ற தர்கா வுடன் நாகூர் திகழ்கிறது. ஆண்டவர் அடக்கமான முதலாண்டு நினைவு கந்துளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/297&oldid=585178" இலிருந்து மீள்விக்கப்பட்டது