பக்கம்:நாகப்பட்டினம்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 நாகபட்டினம்

என்று கொண்டாடப்பெறுகிறது. கந்தூரி என்றால் திருவிழா இதுதான் இதன் ஆண்டுத் திருவிழா. முதல் நாள் கொடியேற்றத் திற்குரிய கொடி நாகையிலிருந்து பெரும் அணிநலத்துடன் ஊர்வலமாகக் கொண்டு வரப்பெற்று ஏற்றப்படும். பத்து நாள்கள் விழா நடக்கும். பத்தாம் நாளில் ஆண்டவர் அடக்கமான இடத்தின்மேல் சந்தனம் பூசும் சந்தனக் கூடு விழா நிகழும். அடக்கத்தின் மேல் சந்தனம் பூசப்பெற்று வெண்பட்டாம் 'சாதரா போர்த்தப்பெறும். முதன்முதலில் அதற்குரிய சந்தனத்தை ஒர் அந்தன வகுப்பினர் வழங்கினர். இவர் ஆண்டவரால் நோய் நீக்கப் பெற்றவர். இவர் வழங்க வேண்டும் என்றும் முன்னரே ஆண்டவரால் கூறப்பட்டதாம். ஒருமுறை பர்மா நாட்டு மன்னன் இவ்வெண்பட்டாடை சாம்பிராணி முதலியவற்றைப் பேழையில் வைத்துக் கப்பலில் அனுப்ப, கப்பல் கவிழ்ந்தது; பேழை மிதந்து நாகூரை அடைந்தது என்பர். இந்நிகழ்ச்சி நெடுங்கிள்ளி காலத்தில் பீலிவளை தன் மகனைப் பேழையில் கப்பல் வழி அனுப்பு. கப்பல் கவிழ்ந்தும் பேழை கரை சேர்ந்ததை நினைவுபடுத்துவதாக உள்ளது.

மராத்திய மன்னர் காலத்திலிருந்து சந்தனமும் வெண்பட்டும் ஆண்டுதோறும் இன்றும் மராத்திய மன்னர் வழியினரால் நேரடியாக வழங்கப்படுகிறது. அதனைக் குதிரை யானையுடனே வரவேற்றுப் பெறுவர். மராத்திய மன்னர் குடும்பத்தார் நலன் வேண்டித் தனியொரு வழிபாடு ஆற்றப்படுகிறது. இதற்காக மராத்திய மன்னன் இரண்டாம் துளசா ஒரு பட்டயம் உருவாக்கி வழங்கியுள்ளான்.

பத்தாம் நாள் திருவிழா நிறைவடைந்ததும் முதல் நாள் ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பெறும். அஃதும் ஒரு விழாவாக அமையும். அந்நாளில் வெளியூரிலிருந்து வரும் ஆண்டவருடைய மாணவர் வழியினர்க்கு ஆண்டவர் காலத்தில் உதவியது போன்று வழிச்செலவு வழங்கப்படுகிறது. இப்போது இப்பெருவிழா 15 நாள்கள் கொண்டாடப்படுகின்றது. .

இக் கந்துாரித் திருவிழாவிற்கு ஒருமுறை இசுலாமிய அடியாரும் கவிஞருமாகிய குணங்குடி மஃச்தான் சாயபு அவர்கள் வருகை தந்து பத்து நாளும் தங்கி ஆண்டவர்மேல் பாடல்கள் பாடிச் சென்றுள்ளார். இவர் போன்று இசுலாமியத்தின் புலவர் சதக்கதுல்லா அவர்களும் வருகைதந்து புகழ்ப்பாக்கள் பாடியுள்ளார். r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/298&oldid=585179" இலிருந்து மீள்விக்கப்பட்டது