பக்கம்:நாகப்பட்டினம்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை - 2.85

ஏற்றோர் 1555 இல் பிராட்டெஃச் டெண்டுகள் எனப் பெற்றனர். இவர்கள் முதலில் ஒடுக்கப்பட்டாலும் பின்னர் தலையெடுத்து உலகமெல்லாம் பரவினர். -

கிறித்துவம் அமைந்த ஊர்களில் பிராட்டெஃச் டெண்டுகள் அமைத்தனர். லூத்தரின் புரட்சிமாற்றத்தால் கிறித்துவத் திருச்சபைத் தந்தையர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆனது குறிக்கத்தக்கது.

சில ஒருமுகம் . . . - மேலும் இப்பிரிவுகள் கிறித்துவத்தில் ஏற்பட்டாலும் பொதுவில் ஏசுவே பின்பற்றப் பெற்றார். அவர்தம் மலைச் சொற்பொழிவும் பத்துக் கட்டளைகளும் அன்றாடத் தொழுகையில் கடவுளை வேண் டும் வழிபாட்டு உரைகளாக அப்படியே கடைப்பிடிக்கப்படுகின்றன.

யெகோவாவை வேண்டும்போது, . "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே" - என்று தொடங்கும் வழிபாட்டு உரை அனைவராலும் அவ்வாறே அவரவர் மொழியில் ஒதப்படுகின்றது. .

'அவ்வாறே ஆகுக' என்னும் பொருள் கொண்ட 'ஆமென்" என்பதை நிறைவு மொழியாகக் கொள்கின்றனர்; அனைவரும் வேண்டுகின்றனர். இவ்வேண்டுதலில் ஏசுவின் அடிப்படைக் கோட்பாடுகளாகிய "இறைவன் அரசு, இறைவன் தந்தை இறைவனே எல்லாம் தருபவன். பாவமன்னிப்பு" என்பன உள்ளன. இவைபோன்றே கிறித்துவராக்க ஞானநீராட்டல் (ஞானஃச்நானம்) முதலியன ஒன்றித்தன. ஞான நீராட்டல் என்பது பார்ப்பனரின் இருபிறப்பாளராக்கும் துணைக்கண்கள் திறப்பு (உபநயனம்) போன்றதாகும். கிறித்துவத்தில் பிரிவுகள் இருப்பினும் அனைவரும் கடவுளாக யெசோவா வையேக் கொள்வர். மறைநூலாக விவிலியத்தையே கொள்வர். இந்நூலின் பழைய ஏற்பாடு, புதிய h ஏற்பாடு என்னும் பிரிவுகளில் பிராட்டெஃச்டெண்டுகள் புதிய

ஏற்பாட்ட்ைச் சிறப்பாகக் கொள்வர். பிறந்தநாள் விழா

சிறப்பாக ஏசுகிறித்து பிறந்தநாள் விழாவைத் தவறாது டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் இரவு 12 மணியில் கொண்டாடுவது ஒருமித்த தாயிற்று. ஏசு குழந்தைகளுக்குப் பரிசு வழங்கல், பிறந்த நாள் மரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/303&oldid=585184" இலிருந்து மீள்விக்கப்பட்டது