பக்கம்:நாகப்பட்டினம்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை - 289

நாகை தென்னிந்திய உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய திரு ஈஃச்டர்ராசா என்பார் பணியிலிருந்து விலகி அமெரிக்கத் திருச்சபை ஒன்றில் சேர்ந்து அதற்கென ஒர் அமைப்பை உருவாக்கினார். வெளிப்பாளையத்தில் ஒரில்லத்தில் தொடங்கிய, அவர் பின்னர் அமெரிக்க உதவியுடன் தொழுகையிடம் ஒன்று அமைத்து அதனைப் பெரிய கூடமான கோயில் போன்று அமைத்தார். அன்னோர் பெரிய இரைச்சலுடன் முழக்கமிட்டு வழிபாடாற்றுவர். அலிலேயா என்று உரக்க ஒலமிடுதல் போன்று முழங்குவர். இதனைச் சேர்ந்தோர் ஓரளவான எண்ணிக்கை கொண்டவராக நாகையில் உள்ளனர். கிறித்துவர் நடைமுறை -

இவ்வாறாக நாகையில் இடம் பெற்ற கிறித்துவம் தன் மக்களை நகருக்குள் பரவலாகவும் சிதறலாகவும் பெற்றுள்ளது. முன்னர் அவ்வத் திருச்சபையார் சிலர் குழுவாகத் தெருமுனையில் ஞாயிறுதோறும் நின்று ஏசுவின் அறிவுரைகளைப் பரப்பினர்.

சைவ சமயத்தவர் யார்கழித் திங்களில் விடியலில் பாடிக் கொண்டு தெருக்களில் வருதல்போன்று திருச்சபையாரும் செய்தனர். தமிழ் மண்ணில் வாழ்வோரது பழக்கங்களைக் கைக்கொண்டு அதன் வழி கவர்ச்சியூட்டினர்.

முகம்மதியரானவர் என்பது போன்று கிறித்துவரானவர் என்று தமிழ்மண்ணின் பிற சமயத்தாரைத் தம் சமயத்தில் சேர்த்துக் கொண்டனர். மெய்யறிவு நீராட்டு என்னும் ஞானஃச்நானம் செய்வித்துக் கிறித்தவராக்கினர்; நாகையிலும் இது நிகழ்ந்தது.

எவ்வாறாயினும் கிறித்துவர்பால் அமைந்த பிற மரபுகளும், செயல்முறைகளும், அன்பும், அரவணைப்பும், துணையும் வாழ்வில் ஈடுபாடும் கொண்டவையாக அமைந்தன.

திருக்கோயில் நிகழ்ச்சிகள் அன்றி, திருமணம் போன்ற நல்விழாக்களிலும், உயிர்நீத்த அவல நிகழ்ச்சிகளிலும் திருச்சபை ஆயர் பங்கு கொண்டு தொழுகை நடத்தி வாழ்த்தி ஆறுதல் தருவார். நோய்வாய்ப்பட்டவர் இல்லம் சென்று தொழுகை நடத்துவார். கிறித்துவத்தில் வேறுபட்ட சமயத்தாருக்கும் இவை போன்றவற்றைச் செய்வது குறிக்கத்தக்கதாகும். 「ら(T、2.o.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/307&oldid=585188" இலிருந்து மீள்விக்கப்பட்டது