பக்கம்:நாகப்பட்டினம்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை - 291

மக்களாலும் விரும்பத்தக்க பெருமையுள்ள கன்னி என்னும் பொருளில், வேள் - விருப்பத்திற்குரிய அம் - பெருமையுள்ள கன்னி - கன்னியன்னை என்னும் பொருளில் இப்பெயர் அமைந்தது. ஆனால் வேளாங்கண்ணி என்று கண்ணைக் குறித்து வழங்குவது பொருந்தாததாகும். கன்னியன்னை மேரியாள் வழிபடுவோர்க்கு உடல் நலத்தை (ஆரோக்கியத்தை) வழங்கி யருளுவதால் ஆரோக்கியமாதா என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்பெறுகிறார்.

நாகையைப் போர்த்துகீசியர் ஆண்ட 17 ஆம் நூற்றாண்டில் ഷുങ്ങങ്ങ് மரியாளின் அருளிப்பாடுகளாகத் தெற்குக் கடற்கரைக் குப்பத்தில் நேர்ந்தவற்றை அறிந்த போர்த்துகீசிய ஆளுநர் சிறு குடியில் போன்ற ஒரு கோயிலை உருவாக்கினார். 24 நீளம் 12 அகலமே கொண்டதாக அக்கோயில் உருவானது 1920 இல் விரிவு பெற்றது. அது காலப்போக்கில் பல்வகையாலும் திருச்சபையாராலும் பெருமக்களாலும் பெருகி இன்று வானளாவிய எழிற் கோயிலாகத் திகழ்கிறது.

முதலில் பால் விற்கும் சிறுவன், மோர்க்காரி என்று எளிய வர்க்கே அருளிப்பாடுகள் துவங்கி இன்று முடவர். நொண்டி, குருடர், மனநோயாளர்க்குக் காப்பகம் அமைந்துள்ள அளவில் பெருகி யுள்ளது. -

கிழக்கே கடலை நோக்கி வானுயர்ந்த இரட்டைக் கோபுரங் களுடன் திகழும் கோயில் 1974-75 இல் மேற்கு நோக்கிய பெரும் காட்சிக் கட்டடத்தையும் பெற்றது. முன்பகுதியில் சதுரப் பீங்கான் ஒடுகள் வெளிநாட்டிலிருந்து கொணர்ந்து பதிக்கப்பட்டன. மரியன்னை பெயரில் 'மாதாகுளம் ஒன்று உள்ளது. அங்கிருந்து கோயிலுக்கு வரும் வழியில் அன்னையின் அருளிப் பாடுகள் சிற்பங்களாகச் சிறுசிறு கலைக் கூடங்களாகக் காட்சி தருகின்றன. அன்னை பிறந்த நாள் செப்டம்பர் 8-இல் சிறப்புறு கிறது. ஒவ்வோராண்டும் அன்னையின் மின் ஒப்பனைத் தேர்த் திருவிழா நிகழும். ஆகஃச்டு 29-இல் கொடியேற்றப்பட்டு 10 நாள்கள் பெருவிழாவாக நிகழும். தமிழ்நாட்டளவிலும் இந்திய தேச அளவிலும் பல்வகை மக்கள் நூறாயிரக்கணக்கில் குழுமுவர். தமிழ்நாட்டு மூலை முடுக்கிலிருந்தெல்லாம் கள்வி ஆடையும், வண்ண உடையும் உடுத்தி அன்னை மரியாள் கொடிபிடித்துக் கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/309&oldid=585190" இலிருந்து மீள்விக்கப்பட்டது