பக்கம்:நாகப்பட்டினம்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை - 293

வேளாங்கன்னியால் நாகைக்கு ஒரு சிறப்பு மட்டுமன்று, விழாக்காலங்களில் குறிப்பிடத்தக்க பணப்புழக்கவளமும் வாணிபப் பெருக்கமும் நேர்கின்றன. -

எ. சமய அமைதி "வணங்கும் துறைகள் പു ஆக்கி மதிவிகற்பால் பிணங்கும் சமயம் பலப்பல ஆக்கி அவையவை தோறும் அணங்கும் பலப்பல ஆக்கி" (24) என்று நம்மாழ்வார் பாடினார். நாகையில் கடவுள் பலர்; கோயில்கள் பலப்பல வணங்கும் துறைகள் பல. ஆனால் மக்கள் அறிவுக் கீறல் (மதிவிகற்பு) பெறவில்லை; பிணங்கி நிற்கவில்லை; இனங்கியே வாழ்கின்றனர். ஒருவர் சமயக் கோயிலுக்கு மற்றவர் போகின்றனர். விழாக்களில் பங்கு பெறுகின்றனர். கலந்து கொள்கின்றனர். மகிழ்கின்றனர். இன்றுவரை பிணக்கமோ பூசலோ இல்லை. -

ஆனால் இப்போது முளைத்திருக்கிற புது இராம அடியார்கள் எதிர்காலத்தை எவ்வாறு ஆக்குவாரோ அண்மையில் பிள்ளையார் ஊர்வலத்தை நாகூருக்குக் கொண்டு சென்றமை நல்ல அறிகுறி அன்று. -

இருப்பினும் நாகைப் பொதுமக்களும் பிற அரசியல் இயக்கத் தாரும் அமைதிச் சமய நோக்குடையாரும் சான்றோரும் அடியார் களும் பிணக்கும் பூசல் நிலைமையும் ஏற்படாமல் காக்கவேண்டும். சமய நாகை அமைதி நாகையாகவே அமைக! நாகை சமயத்தால் பெருமையுள்ளது. இப்பெருமை அகப் பெருமையாகவும் வெளிநாட்டில் ஓரளவில் சைவம் புகுந்த அளவில் புறப்பெருமையாகவும் அமைந்தது.

இவற்றிற்கும் முன்னாக இரண்டு பெருமைகளையும் நாகை பெற்றது. வணிகத்தாலாகும்.

6, சமய நாகை - ஆசிரியர் கொண்டுகாட்டி கொண்டு காட்டி நூற்குறுக்கம்

1. தேவநேயன் ஞா. : வட.வர. - பக். 143,144 2. மறைமலையடிகள் : சை.சி. ஞான - பக், 1 19 3. பவணந்தி முனிவர் : நன் - பொதுப்பாயிரம் -

நூற்பா 11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/311&oldid=585192" இலிருந்து மீள்விக்கப்பட்டது