பக்கம்:நாகப்பட்டினம்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 நாகபட்டினம்

சந்தனமும் முத்தும் வந்திறங்கியதையும் காட்டுகின்றன. இவை வந்த கப்பல் அடிப்பாகம் பரந்த பரப்புடையதாக இருந்ததைக் குறிப்பதன் மூலம் மிகுதியான பொருட்களின் கொள்கலமாக அக்கலம் இருந்தது என்றார். இவைபோன்ற அழகும் வளமுமான பொருள்களுடன் "அஞ்சு வண்ணமும் தழைத்ததையும் காண்கிறோம். இந்த "அஞ்சுவண்ணம்" பற்றிப் பின்னர்க் காணலாம்.

இவற்றை வண்ணனை என்று தள்ள வேண்டியதில்லை. பட்டினப்பாலை காட்டும் பூம்புகார்த் துறைமுகத்தில்,

"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்" (4) (புரவி - குதிரை. கால் - தரைவழி. கறி - மிளகு. ஆரம் - சந்தனம். குணகடல் - கீழைநாடு. துகிர் - பவளம். வாரி - வருவாய்.) என்ற உருத்திரங்கண்ணனார் பாடல் அடிகளின் மறுபடிகளாக மேற் கண்ட காளமேகம் பாடல் அடிகள் இருப்பினும், இவற்றின் நிழல்கள் போல இருப்பினும், இவற்றில் உண்மை இருக்கிறது என்று கொள்ளலாம். காட்டும் பொருள்கள் 17, 18 ஆம் நூற்றாண்டு களிலும் ஆலந்துக்காரர் ஆட்சியிலும் வந்து இறங்கின.

மேற்காணப்பட்ட காளமேகத்தின் பாடலின் பின்னிரண்டு அடிகளில், கடற்கரையில் இறக்குமதியான சந்தனத்தைப் பெண் குரங்கு ஒன்று விறகுடன் வாரி யிறைத்தது. அதனைக் கண்ட ஆண் குரங்கு சினந்தது. பெண் குரங்கை அடிக்க எழுந்தது. எழுந்து அதன் கையை முறுக்கியது. உடனே, பெண் குரங்கு இதற்கு எதிர்ப் பாகத் தன் வாயில் அடக்கியிருந்த முத்தைக் கையில் வாங்கி ஆண் குரங்கின் மேல் வீசியெறிந்துவிட்டுப் பக்கத்திலிருந்த பாக்கு மரத்தில் மீது ஏறிக்கொண்டதாம் என வருகிறது. -

காளமேகத்தின் இஃதொரு கற்பனை வண்ணனை நயமானது; சுவையானது. ஆனாலும் சந்தனம் இறக்கிக் குவியலாகக் கிடந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/318&oldid=585199" இலிருந்து மீள்விக்கப்பட்டது