பக்கம்:நாகப்பட்டினம்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தொழில் நாகை 36 7

வெளிநாட்டு வணிகத்திலும் உள்ளூர்வாணிபத்திலும் புழக்கத்தில் இருந்தன. கழஞ்சு முதலியன

நாணய அளவுச் சொற்களாகக் கழஞ்சு (50கிராம் எடை), மஞ்சாடி (5 கிராம் எடை) அளவுகள் வழங்கப்பெற்றன. பின் வராகன் (வராகம் - பன்றி) என்னும் பன்றி பொறித்த கன்னட நாணயம் முதலில் வந்து பின்னர் பொன்னிலும் பல்வகை வராகன் என வந்தது.

நாகையில் நாணயங்கள் அச்சிட்ட தொழிலகம் மதுரை நாயக்கர் காலத்தில் இருந்துள்ளது என்கிறார் புலவர் சே, இராசு அவர்கள். (12)

மராத்தியர் காலத்தில் பணம், சக்கரம், வராகன் முதலியன வெளிவந்து நாகை நகரில் புழக்கமாயின. பின்னர் இவற்றுடன் போர்த்துகீசியர் கி.பி. 1500 கள்ளிக்கோட்டையில் நாணயவார்ப்புத் தொழிலில் அச்சேற்றிய நாணயம் நாகையில் புழக்கமாயிற்று. பின்னர் ஆலந்துக்காரர் பழவேற்காட்டிலும், நாகையிலும் நாணயத்தை அச்சிட்டனர்; நாகையில் அத்தொழில் அமைந்த இடந்தான் இன்றும் நாணயக்காரத்தெருவாக உள்ளது. அச்சடிப் பதை மராத்தியர் தம் மொழியில் கம்பட்டம் என்றனர். இதனை அச்சேற்றும் உரிமையை ஆலந்துக்காரருக்கே பங்குத்தொகை வருவாய் வழங்குமாறு ஒப்படைத்தனர்.

இந்நாணயங்களின் ஒருபுறம் திருமால் உருவமும், மறுபுறம் தேவநாகப்பட்டின என்னும் புகழ்ச் சொல்லும் இடம் பெற்றன. 18ஆம் நூற்றாண்டளவில் நாகைப் பெருமாள் கோயில் கோபுரம் பொறிக்கப் பெற்றது.

நாகை நாணயக்காரத் தெருக் கம்பட்டத்தில் தங்கக் காசுகளாகக் கீழ்வரும் 5 காசுகள் அச்சாகிப் புழக்கத்தில் அமைந்தன. காலவாரியாக,

பொன்காசு

1. கி.பி. 1662 - 1677 .. பரங்கிப்பேட்டை வராகன் 2. கி.பி. 1676 . தஞ்சாவூர்ப் பணம் 3. கி.பி. 1593-1694 . ஒற்றைப்பணம், இரட்டைப்பணம் 4. கி.பி. 1747 - 1781 .. நாகபட்டினம் வராகன்

5. கி.பி. 1781 .. நாகபட்டினம் 'ஃச்காட் வராகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/325&oldid=585206" இலிருந்து மீள்விக்கப்பட்டது