பக்கம்:நாகப்பட்டினம்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3鲁器 : நாகபட்டினம்

வெள்ளிக்காசு இ.பி. 1675 .. 'ஃருவட் பெரிய பணம்

நாகை நாணயக்காரத் தெரு நாணய அச்சடிப்புத் தொழில் கத்தில் பணக் கம்பட்டம் என்றும் வராகன் கம்பட்டம் என்றும் இரண்டு வகைப் பகுதிகள் இருந்தன.

செப்புக் காசுகளாக நாகரி எழுத்துப் பொறிக்கப்பெற்ற காசுடன் தமிழ்ப்பெயர் பொறிக்கப்பெற்ற 1, 2, 4, 10, 15 காசுகள் மதிப் புள்ளவை வெளிவந்தன. ஈயக்காசுகளும் தமிழ் எழுத்து பொறிக்கப்பெற்று வெளிவந்தன. -

இவற்றில் ஒன்றிரண்டு போக பிற நாகையில் புழக்கமாயின. ஓரளவில் உள்நகர்ப் புழக்கத்திலும் பயன்பட்டன.

ஆங்கில ஆட்சியில் அவர் பாங்கில் நாணயங்கள் அவர் நாட்டில் முதலில் அச்சேறி வந்தன. அவர்தம் வணிக நிறுவனத்தைத் துவங் கிய போது ஆங்கில ஆட்சியர் முழுமையாக 994 நாணய வகைகளை வெளியிட்டனர். அவர்தம் நாணயங்களில் முதலில் விக்டோரியா பேரரசியின் மார்பளவு உருவமும், பணத்தின் மதிப்பும் பொறிக்கப் பெற்றன. பின்னர் பிற பொருள் உருவங்கள் இடம் பெற்றன. அவ்வப்போது ஆண்ட மன்னர் தலை உருவம் பொறிக்கப்பெற்றது. பணத்தாள் f

ஆங்கிலர் இந்திய ஆட்சியைப் பிடித்ததும் இந்திய நாடு முழுமை யுமாக Rupee என்னும் அளவையிடப் பெற்ற நாணயங்கள் வந்தன. அதனையே நாம் உருவம் பொறித்த நாணயமாகவும் கருதி 'உருவா என்கிறோம்.

சில்லறைகளாக ஓர் உருவாவுக்குக் கீழ் உள்ளவற்றைக் காசு என்கிறோம். அவை, நாணயங்களாகவே வந்தன. பொன்னும், வெள்ளியாலும், பித்தளையாலும், தாம்பிரத்தாலும் புதிய நிக்கலாலும் ஆன நாணயங்களும் வந்தன. .

பெரும் மதிப்புள்ள ஓர் உருவாயும் அதற்கு மேலும் தாளில் அச்சிடப்பெற்ற தாள்பணம் வெளிவந்தது. அஃதும் புழக்கமாயிற்று. உருவா 1000 பெறும் தாளும் வந்தது.

இவற்றுடன் நாகையின் வெளி வணிக்த்தில் அமெரிக்கத் தாள் பனமும் பழக்கமாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/326&oldid=585207" இலிருந்து மீள்விக்கப்பட்டது