பக்கம்:நாகப்பட்டினம்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 Ö நாகபட்டினம்

வாணிபத்தாலும் வணிகரும் வாணிபரும் நாட்டுப் பொருளியலை நிலைநாட்டுகின்றனர்; நுகர் பொருளுக்கும், பயன்படுத்தும் மக்களுக்கும் வணிகர் ஒரு பிணைப்புச்சரடு ஆவார். நேர்மையான வணித்தால்தான் பொருள் சமப்படுகிறது. வணிகர் குணநலன்கள் -

அவர் யார் நேர்மையான வணிகர் அவருக்கு இலக்கணம் வகுத்துத் திருவள்ளுவர் அறிமுகம் செய்துள்ளார். அவர் பிறர் ຄurgoruto தம் பொருள்போலக் கருதிச் செயற்படுபவர். இதனைக் கொள்வது மிகையும் கொடுப்பது குறைவும் இல்லாதவர் என்றார் உரையாசிரியர் பரிமேலழகர். அவர்தாம் வணிகர்; அவரிடந்தான் வணிகம் உயிரோட்ட முள்ளதாயிருக்கும். இதனைத் திருவள்ளுவர்,

"வாணிபம் செய்வார்க்கு வாணிபம் பேணிப்

  • 。剔

பிறவும் தமபோற் செயின்" (13) என்றுகூறி வணிகர்க்கு இலக் கணம் படைத்தார். இதனை நடுவுநிலைமையில் வைத்து வணிகரை நடுவராக்கினர். .

இவ்வாறான நேர்மையானவரின் செயற்பாட்டிற்கு - தொழி லுக்கு நன்றியாக நாம் ஒரு கைம்மாறு செய்கிறோம். அதுதான் வணிக ஊதியம் (இலாபம்) எனப்படுவது. முறையாகச் செய்யாதவர் தாமாகவே இந்தக் கைம்மாற்றை இழக்கிறார். இதுதான் இழப்பு (நட்டம்) எனப் படுகின்றது.

வணிகர் உழைப்பும் அறிவு நுணுக்கமும் உடையவர். அவர் விற்பனைக் கூடத்தில் அமர்ந்து பொருள் நுகர்வோர்க்கு நேரடியாகப் பொருளைக் கொடுப்பது வாணிபம் (வியாபாரம்). அவரே பொருளை விற்பனைக்குப் பெறத் தொகுக்கும் போதும் மொத்தமாகத் தரும்போதும் வணிகம் செய்த வணிகர் ஆகிறார். வணிகர் ஒருவராகவும் இருக்கலாம்; பலராகவும் இருக்கலாம்; கூட்டு சேர்ந்த நிறுவனத்தாராகவும் இருக்கலாம்.

எவ்வாறாயினும் அவர் தனிப்பட்டவர் என்னும் வகையில் எட்டு குணங்களைப் பெற்றிருப்பார் - பெற்றிருக்க வேண்டும் என்று பிங்கலம் என்னும் சொற்களஞ்சிய நூல் கூறியுள்ளது. அவை எட்டும் இவை:

1. தனிமை ஆற்றல், 2. வெறுப்புக் கொள்ளாமை, 3. செய்யத் தக்க இடம் தெரிந்து செய்தல், 4. நேரத்தில் செயலாற்றல், 5. எதிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/328&oldid=585209" இலிருந்து மீள்விக்கப்பட்டது