பக்கம்:நாகப்பட்டினம்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.32 - நாகபட்டினம்

பலர் காளிமுத்துப் புலவர் தேவரடியார் குலத்தவர் என்பதை ஒருமுகமாகக் கூறியுள்ளனர். நாகையைச் சேர்ந்தவர் என்பதைப் பலர் குறிக்கவில்லை. அபிதானசிந்தாமணியில் பள்ளிக்கொண்டான் என்னும் "பரதவனை" என்றுள்ளது. பரதவர் மீனவக் குலத்தவர். இஃது ஒரு குறிப்பாகிறது.

இப்பெரும் அறிஞர்கள் தத்தம் ஆய்வுகளால் குறிப்பது போன்று கவித்திருமதி காளிமுத்து நாகையில் வாழ்ந்தவரேயாவார். கற்றவர் பயில் நாகை பெற்ற கற்றவரேயாவார்.

மறு குழப்பம்

மற்றொரு குழப்பம் "வருணகுலாதித்தன் மடலை எழுதியவர் அம்மைச்சி என்னும் தாசி" என்று திரு ந.சி.க. குறிக்கிறார். வருணகுலாதித்தன் உலாமடல் முதல் பதிப்பில் அம்மைச்சி எழுதியது என்று பதிப்பாகியுள்ளது. அம்மைச்சி வருண குலாதித்தன் காலத்துடன் மாறுபடுவதால் இவை பொருந்தா. திரு. கு. அழகிரிசாமி அவர்கள் "நீலாயதாட்சி வருணகுலாதித்த உலா மடலின் பதிப்பாசிரியராகவோ, நூலாசிரியராகவோ இருந்திருக்க வேண்டும்" என்றார். கவித்திருமதியாம் நீலாயதாட்சி இந்நூல் ஆசிரியை என்றொரு கருத்து உலவியது.

நாகைப் புலவர் என்று குறிக்காத சிலரும் இப்புலவர் பாடல்களில் சிருங்காரச் சுவை (பால் இன்பச்சுவை) மலிந்துள்ளன என்று கூறியுள்ளனர். இவர் எழுதிய வருணகுலாதித்தன் உலா மடல் என்னும் நூல் இந்தப் பால் இன்பச் சுவையின் தனிப்பெரும் பெட்டகமாக உள்ளது.

முடிவாக, கவித்திருமதி காளிமுத்து நாகைப் புலவர் என்றும் தேவரடியார் குலத்தவர் என்றும், வருணகுலாதித்தன் மடல் பாடியவர் என்றும் உறுதியாகக் கொள்ளலாம்.

இவர் தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் மீது ஒரு பாடல் பாடியுள்ளார். இப்பாண்டியன் காலம் 18-ஆம் நூற்றாண்டு. இப்பாடல் 1771 இல் பாடப்பட்டிருக்கும் என்று அறிஞர் திரு மு. அருணாசலம் அவர்கள் எழுதியுள்ளார்கள். எனவே காளிமுத்து அம்மை 18ஆம் நூற்றாண்டினர். இப்பாடலையும் அம்மைச்சி பாடியதாகச் சொல்வர் சிலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/350&oldid=591337" இலிருந்து மீள்விக்கப்பட்டது