பக்கம்:நாகப்பட்டினம்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - - - நாகபட்டினம்

இருந்த நடுவர் செம்மல் மு.மு. இசுமாயில் அவர்கள் தலைமையில் திருமிகு கோபால தேசிகன் அரிய உரையாற்றினார். இவர் சிறந்த திருமாலியத் தமிழ் அறிவரும் ஆவார். இவரால் நகரம் கற்றவர் உதவிபெற்ற நாகையாயிற்று. - மலையின் குன்றுகள்

கற்றவர் வரலாற்றில் அடுத்து மறைமலை யடிகளாரின் மாணவர்கள் பலர் முன்வருகின்றனர். தண்டபாணிப் பெருமகனார் என்பார் திருக்குறள் அறத்துப்பாலுக்கு விருத்தியுரை தந்தவர். இவரின் இளவல் திரு கோபால கிருட்டிணன் என்பார் பல புதினங்களை எழுதியவர். இவரும் புலமை செறிந்தவர். வள்ளலார் வாழ்வினர்

வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளாரின் திருஅருட்பாவில் தேர்ந்தவரும் வள்ளலாரை அடியொற்றி வாழ்ந்தவரும் ஆகிய திரு அருணாசலம் பிள்ளை என்பார் நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலிலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் தெருவில் ஒர் இல்லத்தில் வாழ்ந்தார். அவரை யான் ஒருமுறை கண்டு உரையாட நேர்ந்தது. வள்ளலாருடன் உரையாடியமை போன்ற உணர்வு கொண்டேன். தோடா பெற்றவர் -

நாகை நாட்டுயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணி யாற்றிய புலவர் கோ. சதாசிவம் பிள்ளை நீலலோசனி என்றொரு இதழை வெளியிட்டார். அரிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். புலிக்கண்ணி', 'மறலிவிடுதூது முதலிய நூல்களை எழுதினார். இவர் இறுதியில் எழுதிய கையறுநிலை நான் இயற்கையெய்திப் போகும் இடத்தில் தொல்காப்பியர், திருவள்ளுவர் முதலிய சான்றோர்களைக் காண்பேன் என்னும் கருத்துடைய அகவலாகும்; சுவையானது முன்னர் சட்டையப்பர் கோயில் தேர் இழுக்க "வடம் பிடிக்க வாருங்கள்" என்று பாடிச் செல்வாக்கை நிலை நாட்டியதைக் கண்டோம். இவர் தமிழ்ப் புரவலர் மதுரை பாண்டித்துரைத் தேவரவர்களிடம் தோடாவும் பாராட்டும் பெற்றவராவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/358&oldid=585239" இலிருந்து மீள்விக்கப்பட்டது