பக்கம்:நாகப்பட்டினம்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றவர் பயிலும் நாகை - 343

வடமொழி உபநிடதம் தமிழில் மொழி பெயர்க்கப் பெற்றது. அதைப் பின்னர் அறியலாம். நாகையில் பிள்ளையவர்கள்

தமிழ் உலகில் பிள்ளையவர்கள் என்றால் திருச்சிராப்பள்ளி மகாவித்துவான் புலவர் ஏறு திரு சி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களையே குறிக்கும். பிள்ளையவர்கள் நாகைக்கு வந்து ஈராண்டுகள் உறைந்து நாகையைப் புலவர் நாகை ஆக்கினார்.

பிள்ளையவர்கள் (1815–1876) மதுரை திரு சிதம்பரம்பிள்ளை - திருமதி அன்னத்தாச்சி பெற்ற திருமகனார். பல புலமைச் சான்றோர்பால் தமிழ் பயின்றார். இலக்கண, இலக்கிய, சைவ, சித்தாந்தத்தில் ஒப்பு சொல்ல முடியாத பெரும் புலமையர். "இலக்கண விளக்கம்' என்னும் நூலை நாகைக்கு அண்மையிலுள்ள கீழ்வேளுர்க்கு வந்து அங்கிருந்த பெரும்புலவர் திரு சுப்பிரமணிய தேசிகர்பால் பாடம் கேட்டதும் குறிக்கத்தக்க ஒன்று. படிப்பின்றி நேரம் இல்லை

தமிழ் நூல்களைப் பாடம் சொல்லுதல் அவர்தம் உயிரோட்ட வாழ்வு செய்யுள் யாத்தல் அவர்தம் நாடித்துடிப்பின் நன்மைகள். சமய புராணச் சொற்பொழிவு அவர்தம் உணர்வார்ந்த பணி. இம்மூன்றிற்கும் இழையோட்டம் என்றும் நீங்காத அவர்தம் படிப்பு.

ஒருமுறை அவர்தம் தலைம்ை மாணாக்கராகிய பூவாளூர் தியாகராச செட்டியார் பிள்ளையவர்களிடம், -

"இடைவிடாமற் பாடஞ் சொல்லுவதாகப் பேர்வைத்துக்கொண்டு நன்றாய்ப் படித்து வருகிறீர்கள்" என்றாராம். (12) இது கொண்டு அவர்தம் நீங்காப் படிப்பை அறியலாம். அவ்வாறு நாளெல்லாம் நேரமெல்லாம் கற்றவரை நாகை பெற்றுப் பலரைப் பயிலவைத்தது. இவ்வகையில் பிள்ளையவர்கள் கற்றவர் பயில் நாகை என்பதற்குச் சிறப்புரை தந்தவராவார். நாகைத் தொடர்பில் அவர்களை அறிவது ஒரு கடமையாகும். நாகைப் புராணம்

பிள்ளையவர்களால் புராணம் பாடப்பெறாத ஊர் சிறப் படையாது என்றொரு வழக்கு உண்டு. அச்சிறப்பை நாகை பெற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/361&oldid=585242" இலிருந்து மீள்விக்கப்பட்டது