பக்கம்:நாகப்பட்டினம்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.48 நாகபட்டினம்

பாங்கு வழக்காடுமன்ற அடையாள நூல். சொற்போரைக் காணலாம். தீர்ப்பு சிவபெருமானுக்குச் சார்பாயிற்று.

நாகைநடுவர் கோயிலில் மார்க்கண்டேயன் மேல் கவரும் கயிறு வீசியதற்காகக் கழுவாய் வேண்டி எமன் வழிபட்டான் என்னும் புராண நினைவிலும் இதன் ஆசிரியர் இவ்வழக்குநூலைப் படைத்ததாகவும் கொள்ளலாம். புலமை விருந்தினர்

நாகையில் வந்தமைந்த புலமை விருந்தினர் பலருள் 1950இல் பெரும்புலவர் அ. கோபாலய்யர் என்பவர் நாகநாதர் திருமுன் தெருவில் சில ஆண்டுகள் உறைந்தார். இவர் கலிங்கத்துப்பரணி, பெருந்தேவனார் பாரதம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிப் பதிப் பித்தவர். தனிப்பாடல்கள் பல எழுதிவர். கடோத்கசன் தூது என்று வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துப் பதிப்பித்தவர்.

புலவர் பலர் நாகைக்கு வந்து பணியாற்றினர். பெரும் புலவர் ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் நாகை நாட்டுயர்நிலைப் பள்ளி யில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். திருவாவடுதுறை, தரும புரம், திருப்பனந்தாள் ஆகிய சைவத் திருமடங்களில் நல்லிடம் பெற்றுப் பல நூல்களைப் பதிப்பித்தார். தம் படைப்பாகவும் பதிப்பாகவும் 150 நூல்களுக்கு மேல் உருவாக்கிய பெரும் ஆசிரியர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு முதுமுனைவர் (D. Litt.) பட்டமளித்துச் சிறப்பித்தது. நாகை கொண்ட புலவர் இவர். கண்முன் காட்சியர்

நம் காலத்தவர் என்று சிறப்பாகப் பல கற்றாரைக் குறிக்க வேண்டும். கம்பத் திறனாளர்

புலவராகக் கல்லாது போயினும் நுண்ணறிவால் புலவராகவும் கற்ற பேரறிஞராகவும் திகழ்கின்றவர் மாண்புத் திரு மு.மு. இசுமாயில் அவர்கள். நாகூரில் பிறந்து நாகை நாட்டுயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். பின்னர் சென்னையில் சட்டக்கல்வி பயின்று அறமன்ற நடுவரானார். சென்னை உயர் அறமன்றத் தலைமை நடுவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். -

கல்வியிற் சிறந்த இப்பெரியார் தமிழ் இலக்கிய நூல்களை ஈடுபாட்டுடன் பயின்றவர். கம்பர் இராமாயணத்தில் தோய்ந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/366&oldid=585247" இலிருந்து மீள்விக்கப்பட்டது