பக்கம்:நாகப்பட்டினம்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றவர் பயிலும் நாகை 3.53

புதுமைத் தமிழ்ப் பேரவை

தென்னிந்தியச் திருச்சபை உயர்நிலைப்பள்ளியாக இருந்த போது தமிழ்ப் பேரவை அங்கு அமைந்து ஒவ்வோர் இலக்கியத் துக்கும் ஒவ்வொரு விழாவாக, சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப் பிள்ளை முதலாகப் பெரும் புகழ் பெற்ற புலவர்களின் செஞ் சொல் மணம் பரப்பியது. இதில் மொழி ஞாயிறு பாவணர் அவர்ளும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும், கவியோகி சுத்தானந்த பாரதியாரும் புலமைத்திரு கி.வா. சகந்நாதனாரும், முத்தமிழ்க் காவலரும், திருக்குறளாரும் தமிழ்த் தேன் சுரந்தனர். இஃதொரு புதுமைப்பாங்கில் என் இயக்கத்தில் நிகழ்ந்தது. நாகைத் தமிழ்ச் சங்கம் -

நாகைத் தமிழ்ச் சங்கம் மீண்டும் தோன்றியது. மறைமலை யடிகளார் நூலகம், இலவச மாணவர் இல்லம், வகுப்புகள், கூட்டங்கள் நடத்தியது. பெரியோர்க்கான யாப்பருங்கலக்காரிகை, திருக்குறள், சிலப்பதிகார வகுப்புகளும் சிறார்க்கான ஆத்திசூடி, கொன்றைவேந்தன் வகுப்புகளும் நிகழ்ந்தன.

என் இயக்கத்தில் புதுமையாக மேடைத் தமிழ் வகுப்பு நடத்தப் பெற்றது. உட்கூட்டம், பெரும் இலக்கியப் பொதுக்கூட்டம், ஆண்டு தோறும் மறைமலையடிகளார் விழா, ஆண்டுவிழாக்கள் நிகழ்ந்தன. நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார் சிலை நிறுவப் பட்டதைக் கண்டோம். ஐயப்பேழை அமைந்து எழுந்த ஐயங்களைப் போக்கிற்று. முதலில் அன்றைய நகராட்சித் தலைவர் திரு அ.மு. பொ. திருவம்பலம் செட்டியார் அவர்களும் அடுத்து வழக்கறிஞர் திரு தம்பையா அவர்களும் தலைவராக அமைந்தனர். பெயர் பெற்ற வழக்கறிஞர் திரு. க.காளிமுத்து அவர்களும், மருத்துவப்புலவர்.திரு. ப.மு. சொக்கலிங்கனாரும் துணைத் தலைவர்களாக அமைந்தனர். இதனை நினைவுறுத்தும் யான் அமைச்சனாக அமைந்தேன். தமிழ்த்திரு.இரா. ஆதிகேசவனார்,திருதோ.ந. வீரராகவன் அவர்கள். தணிக்கையாளர்கள். திரு. நா.வி. புருடோத்தமன் அவர்கள், திரு. தானியேல் பிள்ளை அவர்கள். திரு. வே. கோவிந்தராசன் அவர்கள். திரு இரா. கோவிந்தசாமி அவர்கள் (சிலைக்குழுச் செயலாளர்) செயலாளர்களாக அமைந்து பணியாற்றினர். -

சிறப்பாகப் புலவர் வகுப்பில், ஆசிரியராகக் கற்றோர் அலுவல ராகக் கற்றோர் ஆர்வலராகக் கற்றோர் எனக் கற்றோர் தமிழ் பயின்று புலவர் பட்டம் பெற்றனர். பதினைவருக்கு மேல் தமிழாசிரிய 「らrT.2.hー。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/371&oldid=585253" இலிருந்து மீள்விக்கப்பட்டது