பக்கம்:நாகப்பட்டினம்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 . wo- நாகபட்டினம்

கட்டடங்களும் தொகுப்பு வீடுகளும் திறப்பு செய்யப்பட்டன. ஆனால் ஒன்றுகூட நாகபட்டினம் நகருக்கென்று அமையவில்லை. அனைத்துத் திறப்பும் நாகபட்டினம் நகரின் விழா மேடையிலேயே நிகழ்த்தப்பட்டன என்பதை எண்ணி நாகை மக்கள் ஒரு பெருமூச்சுடன் அமைதி கொண்டனர். .

இவ்வாறெல்லாம் அமைந்த இன்றைய நில்ையில் நாகையில் ஒரு புதுவளர்ச்சிக்கு முதற்படி போடப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முதலாகப் புதிதாக அமைந்த மாவட்ட அலுவலகங்கள், குடிக்கூலிக் கட்டடங்களிலும், நெருக்கடி இடங்களிலும் இயங்குகின்றன. இவ்வாறமைந்த தொடக்க நிலைமை நீட்டிக்காமல் நாளைய வளர்ச்சிப் பணிகளை உயர்த்த வேண்டும். ஆட்சியில் நாளை

நாளைய உலகத்தின் ஏற்றமோ ஏக்கமோ எதுவாயிருப்பினும் இன்றைய ஊர், நகர், நாடு இவற்றின் வளர்ச்சியாலும் வளத்தாலும்தான் நேர வேண்டும்.

உலகில் அறிவியலும் அதன் தொடர்பான பொறியியலும், பிற நலஞ்சேர்க்கும் இய்ல்களுமே உலகை உயர்த்தும் அடித்தளங்களாக உள்ளன. சிறப்பாக அறிவியலாலும், பொறியியலாலும்தான் சிற்றுார் முதல் நாடு வரை வளர்ச்சி பெற வேண்டும். எனவே ஆட்சியாளர் சிற்றுார்களிலும் இவ்விரண்டின் துணைகள் அமையமுனையிபுக் கொள்ள வேண்டும். நாகையும் இதனை எதிர்பார்த்துள்ளது. -

இந்திய நாட்டின் ஒவ்வொரு நகரமும் மூன்று ஆட்சிகளால் பேணப்படுகிறது. அந்தந்த நகர்க்குள்ளேயே அமைந்து நேரடியாக நகராட்சி பணியாற்றுகிறது. மாநிலத் தலைநகரில் அமைந்து மாநில ஆட்சி ஆளுகிறது. புதுதில்லியில் மையத்தலைமை அரசு அமைந்து மாநிலங்களைத் தன் பிடியில் வைத்தும், திட்டங்கள் கொண்டும் ஆள்கிறது. -

நாகை நகரும் இவ்வாறே ஆளப்படுகிறது. நகராட்சி என்பது அவ்வந்நகரத்து மக்களின் சார்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற மக்களாட்சி அமைப்பு. தமிழ்நாட்டில் நகராட்சித் தேர்தல் தள்ளிக் கொண்டே போவது தவிர்க்கப்பட்டு மக்கள் சார்பாளர் மன்றம் அமைந்தாக வேண்டும். இதனால் அன்றாட நலன்களாகிய விளக்கு, குடிநீர், சாலை, பொதுநலம்.ஆகியவை கண்காணிப்புடன்அமையும்.

நாகை நகருக்கு மாநில அரசு ஆற்ற வேண்டியவை நிறைய உள்ளன. இன்றியமையாச் சிலவற்றைக்இங்கே குறிப்பிட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/382&oldid=585267" இலிருந்து மீள்விக்கப்பட்டது