பக்கம்:நாகப்பட்டினம்.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று - நாளை - நாகை 365

மீனவர் நலம்

கடற்கரை மீனவர்களின் விாழ்வியலில் நாட்டம் கொள்ள வேண்டும் ஒரு நலம் மருத்துவ நலமாகும். மக்களின் உடல்நலமும், நோய்த்தாக்கமும் அவர் வாழும் சுற்றுச் சூழலைப் பொருத்தும் அமைகின்றன. கடற்கரைச் சூழலில் உப்பு நீரோடு போராடும் நிலையில் அவர்தம் வளமும் தாக்கமும் வேறானவை. எனவே அவர்கட்கெனத் தனி மருத்துவ ஆய்வு செய்து குப்பப் பகுதியிலேயே சிறுசிறு மருத்துவமனைகள் திறக்கப்பெற வேண்டும். இது போன்றே அவர்தம் தொழிலுக்கு இடையூறு இல்லாமல் அவர்க்கு நுகர்பொருள்கள் அவ்வக் குப்பத்திலேயே வழங்கப் பெற வேண்டும்.

"எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்" (2) என்றார் திருவள்ளுவர். இன்றைய வேந்தராக உள்ள மாநில ஆட்சியர், நாகை நகரத்தார் எல்லார்க்கும் அமையும் பொது நலங்களை ஆழ்ந்து அறிந்து செயலாற்ற வேண்டும். - நீர்ப் போக்குவரத்து

மைய அரசின் பார்வை நாகையில் பதிய வேண்டிய இன்றியமையாமை உள்ளது. அஞ்சல் துறை, புகைவண்டித் துறை, கப்பல் போக்குவரத்துத் துறை, சுங்கத் துறை, வருமான வரித்துறை முதலியவை மைய அரசுடையவை.

அஞ்சல் துறை புகைவண்டித் துறைகளில் உள்ள சிறு சிறு குறைகள் மக்களின் பயன்பாட்டிற்குத் துன்பம் தருபவை. இவற்றை விட, கப்பல் போக்குவரத்து நாகை அளவில் தனிக்கவனம் கொள்ளத்தக்கது. கீழைநாடு செல்லும் பயணிகளுக்கும், பொருள் களுக்கும் கப்பல் மேலும் விடப் பெற வேண்டும். வளமுற்றோர் வான ஊர்திப் பயணம் கொள்ள முடிகிறது. முடியாதவர் சென்னை சென்று தான் கப்பலேற வேண்டும். முன்பு இருந்தது போன்று பயணிகள் கப்பல் அமைக்கப் பெறவேண்டும். இதற்குத் துணை யாகும் பெரும் திட்டமாக இயற்கைத் துறைமுக மல்லாத இதனைச் செயற்கையில் அமைத்தோ, கப்பல் நிறுத்தப் பெறும் தொலைவு அள விற்குப் பாலம் அமைத்தோ வணிகம் பெருகுவதற்கு உதவ வேண்டும். - -

அத்துடன் மாநில அரசின் இணைப்புடன் கரையோரப் படகுப் போக்குவரத்தை அமைக்க வேண்டும். நாகைக்கு வடக்கிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/383&oldid=585269" இலிருந்து மீள்விக்கப்பட்டது