பக்கம்:நாகப்பட்டினம்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 நாகபட்டினம்

அத்துடன் இதனை ஒட்டிய தொழில்கள், பணிகள் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும்.மேலும் எரிவளி கிடைப்பால் நாகை நகர மக்கள் குழாய்மூலம் தம் தம் இல்லங்களுக்கு எரிவளி பெறும் நல்ல வாய்ப்பைப் பெற உள்ளார்கள். எரிவளி பயன்பாட்டுத் தொழில்கள் பெருகும். தனியார் வணிகமும் வளரும்.

இத்தொழில் நாளைய நாகையை நல்ல வளமாக்கப் போகிறது என்பது மகிழ்ச்சிக்குரியது. புதிய தொழில்கள்

இத்துடன் நாகை கொள்ள வேண்டிய தொழில் வளச் சூழல்கள் உள்ளன. இறால் மீன் ஏற்றுமதியுடன் அதனைக் கொண்டு நாகை யிலேயே தொழிலகம் ஏற்பட வேண்டும். அறிவியல் வல்லுநர் கோவை கோது. நாயுடு அவர்கள் ஒருமுறை என்னிடம் நாகை இரால் கொண்டு குல்கந்தும் ஊறுகாயும் செய்யலாம் என்றார்கள். இரால் வளர்ப்போர், பிடிப்போர், விற்போர், ஒருங்கிணைந்து கூட்டுறவு முறையில் இதனை ஆய்ந்து ஒரு தொழிலகத்தைத் தொடங் கலாம். இதுபோன்று மீன் பாடம் செய்தல், உணவுப் பதமாக்கிக் குப்பியில் அடைத்தல் முதலிய தொழில் தொடங்கல் நலம். கடற்கரைப்பகுதியில் உப்பளம் ஏற்படுத்தி உப்பை விளைவிக்க முயலலாம். அவ்வுப்பளம் புதுமுறையில், உணவிற்குப் பயன்படும் மென்துள் உப்பாக்கி விற்கும் சிறுதொழிலகம் தொடங்கலாம். இவ் வாறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி நாகை வளம்பெறும் முயற்சியை மேற்கொண்டால் மக்கள் நலமும் வளமும் பெருக வாய்ப்புள்ளது.

வளர்க, வளம் பெறுக எதிர்கால நாகை:

ஏ. கற்றவர் நாகை

இன்றைய கற்றவர்

தமிழ் மண்ணில் கற்றவர் என்றால் தமிழ் கற்றவர் என்ற நிலை இருந்தது. நாகையிலும் அவ்வாறே என்று கண்டோம். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இன்று தமிழ் கற்றவர் பின்னிலையில் நிற்கின்றனர். தமிழ்க் கல்வி என்பது பெரிதும் அகவாழ்க்கைக் கல்வி. ஓரளவில் புதுவாழ்க்கைக்குப் பயன்படுவது. புறவாழ்க்கைக் கல்வியே இப்போது பெரும்பயன் உள்ளதாகி விட்டது. அகத்தைப் புறம் வென்றதால் நாகையும் புறத்தில் வைரமுடி சூடி வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/398&oldid=585289" இலிருந்து மீள்விக்கப்பட்டது