பக்கம்:நாகப்பட்டினம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - நாகபட்டினம்

என்றும் அந்நாடு நிலத்தின்கீழ் சூழ்ந்துள்ளது என்றும் சுட்டினர். இவ்வழியில் நச்சினார்க்கினியரும் நாகபட்டினச்சோழன் பிலத்துவாரத்தின் வழியே கீழ்உலகம் சென்று நாககன்னிகையைப் புணர அவள் மகனைப்பெற்றாள் என்று எழுதினார்.

மேலும் நாகநாடு என்பது பேரின்ப உலகாகிய சுவர்க்கம்", പ്രഖങ്ങ് என்றெல்லாம் சுட்டினர்.

கீழ்நில மருங்கின் என்னும் கிழக்குத்திக்கு நாட்டை, நிலத்தின் கீழ் அமைந்த தனி உலகமாகவும் குறித்தனர். அத்துடன் நாகர் என்பவர் நாகப்பாம்பின் சின்னத்தைக் கொண்டவர் என்று. கூறினர். இதனை எடுத்துக்காட்டும் உ.வே.சா. அவர்கள்,

"நாக இலச்சினையை அடையாளமாக உடைமையின் இவர்களுக்கு இப்பெயரும், (நாகர் என்ற பெயரும்) தட்சகர் என்ற பெயரும் வந்தனவென்று ஊகிக்கின்றனர்.(9) என்று - ஊகிக்கின்றனர். என்றே குறித்தார். இது ஊகமேயன்றி உண்மையன்று. ஆனால் இஃதொரு கட்டுக்கதை என்பதே உண்மை. எவ்வாறு? - -

நாகர் பாம்புச் சின்னம் கொண்டவராக எவ்வகை வரலாற்றுச் சான்றிலும் இல்லை. நாகர் என்பார் ஒரு சாதியினர் என்று அகரமுதலிகள் குறிக்கின்றன. அவ்வகரமுதலிகளே "நாகர் பதினெண் கணத்தாருள் ஒருவர் நாகலோகத்தவர்" என்றும் நாகலோகம் (சுவர்க்கம்) பெரின்பவிடு என்றும், நாகநாடும் அஃதே என்றும், நாகநகர் பவணம் என்றும் பொருள் எழுதின. "கீழ்பாதி உடல் பாம்பு போன்றும் - மேல்பாதி மாந்தர் உடலமைப்பு போன்றும் கொண்டவர்" (10) என்று சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி குறித்துள்ளது. கதைகளின்புடி சற்று கற்பனை கலந்த பாம்புருவம், இதன் தொடர்பான கதைகள் படைக்கப்பட்டுள்ளமை ஒன்று; தனி ஆதிக்குடிகளாக நாகர்தீவில் வாழ்ந்த வரலாற்றுக் குறிப்புகளை யுடைய மாந்தரினத்தாராகிய நாகர் மற்றொன்று. இரண்டையும் ஒன்றாக்கி எழுதியமை குழப்பத்தை மட்டுமன்று. உண்மையைப் பொய்யால் பூசி மறைக்கும் செயலுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/66&oldid=584948" இலிருந்து மீள்விக்கப்பட்டது