பக்கம்:நாகப்பட்டினம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 § நாகபட்டினம்

இடம்பெற்று நாகர்' என்னும் பெயர் பெற்றனர். பின்னர் அன்னார் பிற மாநிலங்களுக்கும் குடியேறியவராவர். வரலாற்றாசிரியர் அனைவரும் நாகர், நாகத்தீவுகளிலிருந்து குடியேறியவர் என்றே கண்டுள்ளனர்.

தமிழர் உலகெங்கும் பரவினர் என்ற வகையில் அவர் முன்னோர் மலையின் தோற்றத்தவர் என்பதால் நாகன் - நாகர் பெயர் பெற்றுப் பரவிய இடத்திலும் அப்பெயர் பெற்றிருக்கலாம்.

எவ்வாறாயினும் நாகரது தாக்கம் தமிழ்மண்ணில் நேர்ந்தது உண்மையாகும்.

"நாகம் என்னும் வடசொல்லுக்குப் 'பாம்பு என்னும் பொருள் கொண்டு நாக நாட்டாரை எவ்வகையிலும் பாம்புப் பொருள் தொடர்பில் குறிக்க இயலாது. பாம்புக் குறியீடு ஏதும் அன்னார்பால் இல்லை. இந்திய மண்ணில் குடியேறிய இடங்களிலும் மலைப் பகுதியையே முதல் வாழ்விடமாகக் கொண்டு ஆதிக்குடியாகவே கொள்ளப்பட்டனர். நாக மகளிர் சிற்றின்ப ஊற்றத்தர்

பின் எப்படி பாம்புத் தொடர்புபடுத்தப்பட்டது எனில் இங்குதான் நாகரினத்து மகளிரைப்பற்றி எண்ண வேண்டியுள்ளது. அவ்வினத்து மகளிர் நல்லழகியர். அதனிலும் என்றும் இளமைக் கட்டு குலையாதவர். காண்போர் கவர்ச்சிக்குரியவர். இவற்றினும் உள்ளிடாகச் சிற்றின்பம் எனப்படும் உடலுறவு இன்பத்திற்குச் சிறந்தோர் ஆவர். .

எவ்வாறெனில் கதைகளிலும், வரலாற்றிலும் நாககுலக் கன்னியரைத் தமிழ்நாட்டாரும் வடபுலத்தாரும் மணந்ததைக் காண்கிறோம். வடபுலத்திலும் இக்கன்னியர் ஆரிய குலத்தவரால் பெண் கொள்ளப்பட்டுள்ளனர். அறிஞர் இராகுல சாங்கிருத்தி யாயன் அவர்கள் முன்கண்ட ஆரிய குலத்தலைவன் கூற்றில்

"அநேக நாககுலப் பெண்கள் எங்கள் குடும்பத்திலேயே கொள்ளப்பட்டிருக்கிறார்கள் (23) என்றும்,

"நம்முடைய சம்பந்திகளான இந்த நாகர்கள் நகரத்திலே வாழ்பவர்கள்" (24) என்றும் சொல்லப்பட்டுள்ளனர். நெடுமுடிக் கிள்ளி, சூர ஆதித்தன். அருச்சுனன் முதலியோர் நாகர் கன்னியரை விரும்பி மணந்தவற்றையும் கண்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/76&oldid=584958" இலிருந்து மீள்விக்கப்பட்டது