பக்கம்:நாகப்பட்டினம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6:0 நாகபட்டினம்

"துமப் பணிகள்.ஒன்றித் தோய்ந்தா லெனஒருவார் காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம் - தொலையாத இன்பமெலாம் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று" (26).

இருபாம்புகளின் புணர்ச்சி இங்கு உவமையாகக் காட்டப் பட்டுள்ளது. பாம்புகள் புணரும்போது அவை இரண்டு உடல்களும் வளைந்து, திருகித் திருகிப் பின்னி இறுகத் தழுவி ஒன்று விரும்பினாலும் கழல முடியாதபடி வாலை ஊன்றி நிமிர்ந்து நிற்கும் என்பர். இப்புணர்ச்சியே நிறைவு என்பர். இவ்வாறு புணரும் இரட்டைப் பாம்பின் வடிவமே நாகப்பாம்புக் கோயில்களில் வழிபடும் சிற்பமாக வடிக்கப்படுகின்றது.

திருத்தக்கதேவர் இதனைக் கூறுவது சற்று ஆழ்ந்து நோக்கத் தக்கது. உதயணன் வாசவதத்தையை யாழிசையில் வென்று மணந்து புணர்ந்ததை, -

"நஞ்சுற்ற காமம் நனி நாகரின் துய்த்தவாறும்" (27) என்றமை சிலம்பு வெண்பா போன்று உவமை காட்டுகிறது. இதனை விளக்கிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர்,

"இருதலையும் ஒத்த காமத்தை நிாகரைப்போல் நுகர்ந்த படியுமென்க" என்றும்; இதற்கு விளக்கமாக, -

"நாகரோடு உவமை ஒருடம்பாதலும் நீங்கல் அன்மையும் பற்றி (27) என்றும் தெரிவித்தார். இதில் இறுக்கத்தால் ஒருடம்பாதலும் பிணைப்பால் நீங்க இயலாமையும் கூறப்பட்டது. அத்துடன் "நாகரைப்போல" என்றதும் "நாகரோடு உவமை" என்றதும் கூர்ந்து நோக்கத்தக்கது. இங்கு நாகர்' என்றது நாகப்பாம்பின் பன்மையாக நாகர் எனப்பட்டது எனக் கொள்ளலாம். அத்துடன் நாக இனத்து ஆடவர் மகளிர் போல எனக் கொள்ளவும் இடம் உண்டு.

இவ்வாறு உடலின்பத்திற்குப் பாம்புப் புணர்வை உவமை கூறியமையின் விரிவான கற்பனையே நாகர் இனத்தாரைக் கீழ்ப் பாதி உடல் பாம்பின் வடிவம் என்று வண்ணிக்கப் பட்டதாகலாம். இத்தொடர்பிலேயே நாகலோகம் போகத்திற்குச் சிறந்தது - சிறந்த மக்களைக் கொண்டது என்றும் சொல்லப்பட்டது.

எவ்வாறாயினும் நாகர் மகளிர் கவர்ச்சிக்குரியவர் என்பது புலப்படுகின்றது. வட புல ஆரியர் அழகு வடிவினர். அம்மகளிர் உடல் நிறம் மெருகேறிய தந்தம் போன்ற வெண்மையானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/78&oldid=584960" இலிருந்து மீள்விக்கப்பட்டது