பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 சோணு : (ஏமாற்றத்தோடு) ப்சு, என்ன கட்சி போங்க ! உள்ள கட்சி போதாதாக்கும். இது ஒரு புதுக்கட்சி வேனுமா ! - கனக மற்றக் கட்சிகள் கவனியாமல் விட்டிருக்கிற எவ் வளவோ முக்கிய பிரச்னேகளே கவனிப்பது யார், பின்னே ? என்ன ஸார் சொல்றேள், மிஸ்டர் அறி வழகர்வாள் ? அறி : கட்சி பற்றி யான் குறை எதுவும் உரைப்பதற் கில்லே. ஆனல் ஒன்று. தமிழ் வளர்ச்சி அதன் உயிர் மூச்சரக வேண்டும். கனக ; அதுவும் நம்ம லட்சியங்களிலே ஒண்னு தானே. என்ன மிஸ்டர் சொள்ளமுத்து கம்ம கட்சி லெக் ாட்டரியாக இருங்களேன். சொள் : எனக்கு அந்தப் பொறுப்பெல்லாங் சரிப் படாது, லார், கனக : கடமையைத் தட்டிக் கழிக்க சோம்பேறியாக ... சொள் : சோம்பேறியாவது கலைஞன் ஐயா! சோம் பேறி என்பவன் சாதாரண ஆசாமி, கலைஞன், எழுத்தாளன், அரசியல் வாதி, கவிஞன் இவர்கள் எல்லாம் சோம்பிக் கிடக்க உரிமை பெற்றவர்கள். ஆகுல் சோம்பேறிகள் அல்ல. சோம்பல் என்பது இல்லாமலே போகுமானுல், அப்புறம் கல் எது, காவியம் ஏது இலக்கியம், அரசியல் சேவை என்ப தெல்லாம் ஏது! கனக : அரசியலே அப்படி அலட்சியப்படுத்தாதீங்க. அரசியல்வாதி சமூகசேவை செய்பவர்களில் சிறந்த வன், தெரியுமா !