பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நாச்சியப்பன் என உலகறியச் செய்யவேண்டும். தமிழுக்குப் பகையாகும் இதுகள் தமிழ்ப் புலவர்களே, சங்க இலக்கியத்தை, மரபு வழியைப் பார்த்துப் பார்த்துக் கூவும் நேர்த்தியைப் படம் பிடித்துத்தான் பார்க்கவேண்டும். தமிழால் வாழும் தமிழ் இதழ்கள்-தமிழர்களிலேயே கொள்கையின்றி வாழும் இரண்டும் கெட்டான்கள் இப் பிறமொழிப் புகுத்தலேதமிழ்ச்சொற் கொலையை ஏற்கின்றனர்; ஏற்கவைக்க முயல் கின்றனர். 'குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை' எனத் தொடங்கும் ஒரு தனிப்பாடல் போல, இன்று மறைமலை யடிகள் இல்லை; கணக்காயர் பாரதியார் இல்லை என்ற நெஞ்சழுத்தம் இப் புல்லுருவிகளுக்கு. உதிர்ந்துவிடும் இலைதழைகளாம் இதுகளை உதறிவிட்டுப் புதுக் கவிதைகளிலேயே புதுமைமிகுந்த கவிதைகளை, மொழி வளம் சிதையாத கவிதைகளைத் தொகுத்துப் பாராட்டும் காலம் வந்திருக்கிறது. சிற்பத்தொழில் தெரியாதவன் கோயில் கட்ட முடியாது; மொழி நலம் அறியாதவன் காவியம் தீட்டவோ, கவிதை யெழுதவோ முயலுதல் இயலாது என்ற உண்மையை அனைவரும் ஒப்புங்காலம் உருவாகியிருக்கிறது. இத்தகைய காலத்தும் நாச்சியப்பன் பாடல்கள்' போன்ற மரபுக் சவிதைகள் வெளிவருகின்றன என்பது சிந்தனைக்குரியது. கலிவெண்பாவும், விருத்தமும் தமக்குக் கைவந்த கலை என்பதைப் பாவலர் நாச்சியப்பன் இந்நூலில் தெளிவுபடுத்துகிரு.ர். தமிழ் ஆற்றலுடைய மொழி; பாட்டு வடிவத்திற்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய நெளிவுசுளிவுள்ள மொழி. கலிவெண்பாவில் கதைப் பாங்கான ஒரு செய்தியை, எவ்வாறு ஒட்டமும் நடையு' மாகச் சொல்லிச் செல்ல முடியும் என்பதற்கு இந்நூல் தக்க எடுத்துக்காட்டு.