பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனை சிறக்கும் கருத்துக் கோவை டாக்டர் ந. வீ. செயராமன் இணைப்பேராசிரியர், தமிழ்த் துறைத் தலைவர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், கோயமுத்துார்-3. தமிழ் இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்ருண்டு ஒரு மறுமலர்ச்சிக் காலம். சிறுகதை, புதினம், நாடகம் முதலாய இலக்கிய வகைகள், செய்யுள் ஊடகத்தை விடுத்து, உரைநடை வடிவில் படைப்பிலக்கியங்களாக இக் காலத்தில் உருப்பெற்று வருகின்றன. செய்யுள் ஊடகத்தின் கட்டமைப்பில் அண்மைக் காலத்தில் மேலைநாட்டுத் தாக்கம் படிந்தது. இதல்ை செய்யுளின் கட்டமைப்பு நெகிழ்ந்தது; படிப்படியாகச் சிதைந்தது; இறுதியில் வடிவற்ற உருவாக உருக் கொண்டது. ‘புதுக்கவிதை” என்ற பெயரில் 'கவிஞர்களின்’ மனப்போக்குக்கு ஏற்ற வகையில் பலவேறு வடிவங்கள் உருவாகின. "இலக்கணச் செங்கோல்,யாப்புச் சிம்மாசனம், எதுகைப் பல்லக்கு, மோனைத் தேர்கள், தனிமொழிச் சேனை, பண்டித பவனி - இவை எதுவுமில்லாத நிலையில் கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக் கொண்ட புதிய மக்களாட்சி முறை என்ற முழக்கத்துடன் புதுக் கவிதை நாயகர்கள் தமிழிலக்கிய வீதிகளில் ஆரவாரத்தோடு உலா வந்தனர்.