பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 55 உள்ளத் துதித்த உரைவந்து தொண்டையிலே உள்ளும் புறமும் ஒருவழியும் போகாமல் திக்கித் திணறச் சிறுவிழிநீர் கன்னத்தே தொக்கித் துளித்துளியாய்த் தோளை நனைத்துவிழ வள்ளி யழுதநிலை எனக் கவிஞர் பாடுகின்ருர். இந்நிலை சொல்லாடாள் சொல்லாடா நின்ருள் அந்நங்கைக்குச் சொல்லாடும் சொல்லாடும்தான்’ என வரும் கண்ணகியின் துயரநிலையை நமக்கு நினைவூட்டுகிறது அன்ருே! மேலும் வள்ளி-தோழி பாத்திரப் படைப்பும் கண்ணகி.தேவந்தி பாத்திரப் படைப்புக்களோடு ஒப்பு நோக்க த்தக்க பகுதி அல்லவா? தன்னை விட்டுப் பொருள் தேடப் பிரிந்து சென்ற நாயகன், பொருளைமட்டுமின்றி, தன் வாழ்க்கைக்குத் துணை யாகப் பூவையொருத்தியையும் கொண்டான் என அறிந்து வங்கங் கடந்து சென்று தன் உரிமையை நிலைநாட்டிய செய்தியைக் கலிவெண்பா யாப்பில் கவினுறக் கூறும் கதையே அடுத்துவரும் வங்கங் கடந்த மங்கை. பண் டைக்கால அகப் பொருள் மரபாகிய பொருள்வயிற் பிரிவு இக்கதைக்கு மையக் கருவாக விளங்குகின்றது. தொழிலாளர் சங்கங்களில் அரசியல் தலைவர் ஊடுருவல் நிகழ்த்தித் தொழிலாளர்களைத் துவளச் செய்யும் குறைபாடு களைக் கருவாகக் கொண்ட கதை நிகழ்ச்சி 'இருளகன்றிட ஒளிபெருகிட என்னும் பகுதி. இன்பத்தை ஏந்திவரும் கன்னலன்ருே இந்நாள்; மணவாழ்வில் புத்துணர்வு சேர்க் கும் நாள்; சிரிப்பும் விளையாட்டும் ஆர்க்கும் புதுநாள்; அணி மணிகள் கொண்டுவரும் வீட்டு விழாநாள்: செல்வப்பெரு நாள்-எனச் சம்பள நாளினைச் சுவையோடு வண்ணிக்கும் பகுதி சமுதாய விளக்கமாகத் திகழ்கின்றது.