பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - நாச்சியப்பன் யாளர்கள் அ ஞ் சி ப் பதைப்பதையும் பொருளாக் கொள்ளாது, ஏதுமறியாப் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சு பாய்ச்சி வருகின்றனர். இந்நிலையிற்ருன் புலவரேறு நாரா நாச்சியப்பனரின் பாப்பணி சான்ருேர்க்கு மகிழ்வைத் தருகின்றது. இளமுள்ளங்களைக் கெடுக்கும் வண்ணம் மறைத்தெழுத வேண்டியதை விரித்தெழுத இவரது பண்பு இடந் தருவதில்லை. காட்டாக ஒன்றைக் குறிப்பன்: காதலனுங் காதலியும் திரைப்படம் பார்க்கிரு.ர்கள். படத்தில் வருங் காதற் செய்கைகளைக் கண்ட காதலி தன் காதலனிடத்து இன்பமாக இருக்கின்ருள். இச்சிறு நிகழ்ச்சியையே பாவியமாப் படைக்கும் ஆற்றலர்கள் (?) எண்ணற்ருேர் இருக்கின்றனர். ஆயின், புலவரேறு அவர்களினத்துச் சேரத் தயாராக இல்லை. ஆதலாற்ருன், படத்தில் வருங்காதல் பார்க்கும் பொழுதில் மடப்பெண் அவள்செய்த மட்டற்ற செய்கையெல்லாம் ஈண்டுரைத்தல் காதல் இலக்கியத்திற் காகாதாம். தீண்டும் இரண்டுயிர்கள் தேர்ந்தநல் லின்பத்தைப் பாரறியக் கூறுவது பச்சை மொழியாகும் ஊரறியக் கூறல் உயர்ந்த செயலல்ல சற்றுக் குறிப்பிட்டால் சார்ந்தபொருள் கற்பனையால் பெற்றுக் களித்தல் பெரியோர் கடகுைம் (ப-ள்: 7-8) என்று பண்புறக் குறித்தமைந்தார்.திருநீலகண்ட நாயனரை "இளமைபt தூர இன்பத் துறையினில் எளியர் ஆளுர்’ என்ற மட்டில் சான்ருண்மை தோன்றப் பண்புறக் குறித்தமைந்த தெய்வப்புலவர் சேக்கிழாரொடு புலவ ரேற்றை ஒப்புநோக்கி மகிழ்கின்றனன். புலவரேற்றின் கதைபுனைதிறனைத் தொடக்கத்திற் குறித்தனன். அதற்குச் சான்முக ஒன்றன மட்டுமிவண் செப்புவன்;