பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 63 கோதை என்பாட்குத் திருமணம்; வீடொடு விதியும் விழாக் கோலம் பூண்கிறது; மேளம் ஒலிக்கிறது; மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம். கோதையை அடைய எண்ணி முடியாமற் போன கயவைெருவன் அவள் திருமணத்தைத் தடுக்குங் கெட்ட நோக்குடன் முடங்கல் ஒன்றெழுதி ஓராளிடம் கொடுத்தனுப்புகின்ருன். புலவரேறு கூறுகிருர்: ஆளனுப்பி வைத்தான்; அணங்கவளைக் கொட்டவொரு தேளனுப்பி வைத்தான் திருவில்லாப் புன்மகனே (பக். 23) என்னே உணர்ச்சி! திருமணம் தடைபடப் போவதை புலவருள்ளம் அறிந்து கொண்டு விடுகிறது; "ஆளெனும் பெயரில் தேளனுப்பி வைத்தானே’ என்று வருந்துகிறது; 'திருவில்லாப் புன்மகனே' என்று பொங்கிச் சீறுகிறதுதேறுகிறதா அத்துடன்? இல்லை. பாவியத்தைப் படிப் பவர்க்கும் திருமணம் தடைபடப் போஞ்செய்தியை முன்னதாகவே அறிவித்துவிடத் துடிக்கிறது. வெளிப்படை யாகக் கூறிவிட்டால் கதையின் சுவை குன்றிப் போமே! எனவே குறிப்பாகச் சுட்ட முனைகிறது. எப்படி? மண விழவிற்கு முழவொலிக்கிறது. எவ்வண் தெரியுமா? பட்டுப் படுபடெனத் தட்டுக் கெடுகெடனக் கெட்டுக் கிடகிடெனக் கெட்டிமே ளம்முழங்கும் (பக். 24) மேளமுழக்கே காதில் ஒலிக்கும்படியான அருமையான சந்தமமைந்த இம்மங்கல முழக்கில் அமங்கலத்தை மறை முகமாப் புகுத்துகிருர் புலவரேறு. மேற்போக்கிற் பார்ப் பார்க்கு ஒலிக்குறிப்பெனத் தோன்றிலுைம் «ՅԵՔ நோக்குவார்க்கு அதன்கண்ணுள்ள "படு,படு-கெடு, கெடு- கெட்டுக் கிட, கிட’- போன்ற அமங்கலச்