பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 65 பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில கால வகையி னனே என்ருர் பவணந்தியாரும். எனவே மரபை மீறுவதென்பது அறக்கழிவுடைய செயலாகாது. அதுபற்றியே நம்முடைய புலவரேறும் பழையன கழித்துப் புதியன புகுத்தினர் சிற்சில இடங்களில். காட்டாக ஒன்றைக் குறிக்கக் கடவன்: கடல் கடந்து வேற்றுநாடு சென்று வணிகம் மேற் கொள்ளுந் த லை வ ர் க ள் தங்களுடன் தலைவியரை உடனழைத்துச் செல்லற் கூடாது. என்ன? முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை என்பது தொல்காப்பியமாகலான். துணைவியரையும் உடனழைத்துச் செல்வார் தாய் நாட்டை மறந்து அயனட்டிலேயே தங்கிவிடக் கூடுமே என்னும் அச்சமே பற்றி இத்தகையதோர் இலக்கணம் எழுந்ததெனலாம். ஆயின், மனைவியரைப் பிரிந்து சென்றவர், அயனட்டிலேயே புதியள் ஒருத்தியை மனைவியாய்த் தேர்ந்து கொண்டு தங்கிவிடின் என்செய்வது? அது போன்றதொரு சூழல் நேர்ந்த போதுதான் பெண்களும் கடல் கடந்து செல்லலாம் என்று கூறி இலக்கிய மரபை மீறுகிருர் புலவரேறு. நங்கையர்கள் கப்பலிலே நாயகனைப் பின்தொடர்தல் பங்கமென்று சொன்ன பழமை பழித்தெழுந்தாள். கப்பற் றுறைபோள்ை கட்டணத்தைத் தான்கொடுத் தாள் எப்படியும் வாழ்வில் இணைந்திடுவேன் என்றுரைத்தாள் (பக். 79) 'மரபு தெரியாமல் பாடிவிடவில்லை; மரபை மீறியே பாடுகின்றேன்’ என்பதை முதலிரண்டடியில் குறிப்பாய்ச் சுட்டினர் புலவரேறு. -