பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 49 தமிழ் வாழ்வு பாவிரியும் மதுரையிலே புலவர் நாவில் பழகிவந்த பெருமாட்டி! வள மிகுந்த காவிரியின் கரைகளிலே இளமை கூட்டிக் காஞ்சியிலே பெருமைதனை நிறுத்திக் காட்டி பூவிரியும் வஞ்சியிலே புதுமை சேர்த்துப் புகழ்விரியும் தொண்டையிலே எழிலைக் கூட்டித் தாவிவரும் வங்கத்தின் குமரி யான தனித்தமிழாந் திருத்தாயே வணக்கம் அம்மா! திருஞான சம்பந்தன் பாடிப் பாடிச் செம்மாந்த தமிழ்மொழியே! அப்பர் பெம்மான் அருள்வாக்கு மழைபெய்து குளிரச் செய்த அழகுடைய தண்டமிழே சுந்த ரர்தம் திருவாக்கின் கற்கண்டே! வையை வெள்ளந் திரண்டது போல் பாய்ந்துவரும் தேன்ப்ெருக்கே: உருவான ஒவியமே! தமிழர் வாழ்வின் ஒளி விளக்கே! என்தாயே! வணக்கம் அம்மா! தப்பாத வாழ்வுடைய சான்ருேர் பல்லோர் தமிழ்ச் சங்கம் கூட்டியுனை வளர்த்து மூப்புக் கப்பாத இளமையுடன் திகழச் செய்தார் கவின்வாழ்வு பெற்ருய்நீ! வள்ளு வர்தம் முப்பாலாம் திருக்குறளால் உலக முற்றும் முன்னேற்ற வழிகாட்டி அழைத்துச் சென்றே எப்பாலும் புகழ்மணக்கும் தமிழணங்கே! என் தெய்வத் திருத்தாயே! வணக்கம் அம்மா! நா. 4