பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நாச்சியப்பன் பதினெட்டாம் நூற்ருண்டில் வெள்ளைக் காரப் பாவிமகன் நம் நாட்டில் காலை வைத்தான்: மிதிபட்டும் அடிபட்டும் குண்டு பட்டும் மேலுலகம் சென்ருர்கள் நமது வீரர் மதிகெட்ட பேரெல்லாம் வாழ்ந்திருந்தார் மனங்கெட்டுத் தன்மானம் கெட்டோர் மீது சுதிகெட்ட வீணையைப்போல் ஆங்கி லத்தைச் சுமத்திவைத்துப் படுபாவி ஆட்சி செய்தான். எங்கிருந்தோ வந்ததுரை இந்த நாட்டின் எழின்மொழியைத் தான்கற்றல் கடின மென்றே இங்குள்ள எல்லாரும் ஆங்கி லத்தை ஏற்றுவிட்டால் தனக்குமிக வசதி யென்றே அங்கங்கே கல்லூரி நிறுவி மக்கள் அனைவரையும் பரங்கிமொழி கற்கச் செய்தான். மங்கிவரும் வாழ்வுகண்ட மக்கள் பல்லோர் மனமொப்பி ஆங்கிலத்தைக் கற்க லானர்! ஆங்கிலத்தைக் கற்றவர்கள் தம்முள்ளேயும் அடிமைமனம் படிந்ததல்ை குடிகா ரர்போல் தீங்குதரும் வழிகளையே நாடு கின்ருர் திருநாட்டை மீளாத அடிமைப் போக்கில் தேங்கிநிற்கச் செய்கின்ருர், வாத மிட்டுத் தேயத்தைக் காப்பாற்ற வந்தார் போலே ஓங்கியபேச் சாடுகின்ருர் ஆங்கி லத்தை ஒப்பற்ற மொழியென்று போற்று கின்ருர், அடிமைமனம் கொண்டவர்கள் போக்கைக் கண்டால் ஐயையோ! நெஞ்சு வெடித் திடுமே யம்மா! குடிபோதை யகலாத குடிகாரன் போல் குழறிடுவார் உளறிடுவார் தம் கூற்றைத்தான்