பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 筑 பிடிவாதம் பிடித்துவற் புறுத்தி நிற்பார் பிறர் பேசும் மெய்வாதம் ஏற்க மாட்டார் கடிவாளம் இல்லாத குதிரை யைப்போல் கண்விழித்துக் கொண்டே போய்க் குழியில் வீழ்வார்! உடலடிமைப் பட்டாலும் உள்ளத் துள்ளே ஊறிவரும் உரிமையுணர் விருக்கு மானுல் கெடலில்லை யம்மனிதன் அழிந்தாலுந்தன் கீழ்வருமோர் பரம்பரையார் வீரங் கொண்டு அடிமைநிலை மாற்றுதற்குப் போராட்டங்கள் ஆயிரமா யிரமாகச் செய்து வெற்றிக் கொடிபறக்கச் செய்வரிது மெய்யே உள்ளம் கொள்ளுகின்ற அடிமைநிலை துன்பம் அம்மா! வீட்டினிலே திருவிளக்கை ஏற்றி வைத்து விழாக்கள்கொண் டாடுதல்தான் தமிழ் வழக்கம் ஊட்டமுடன் ஆங்கிலங்கற் ருேர் விளக்கை ஊதியனைத் துப்பிறந்த தாள்கொண் டாடும் வாட்டமுள்ள பழக்கத்தைக் காணு கின்ருேம் வளர்ச்சிக்கு வழியுண்டோ அடிமைப் போக்கால்? தாட்டமுள்ள தமிழரெல்லாம் தமிழர் வாழ தலஞ்சேர்க்கும் நெறியான வழியைக் காண்போம்! பிழைப்புக்கே ஆங்கிலத்தைப் படித்த வர்கள் பிழைத்துத்தான் போகட்டும்! நாட்டைக் கேட்டுக் கழைக்கின்ற செயல்தன்னை விட்டால் போதும்: அருந்தமிழைப்பழிக்கின்ற கூச்சல் வேண்டாம்! உழைப்புக்கு மதிப்புண்டு! தமிழர் நாட்டில் உண்மைக்கு வாழ்வுண்டு! புலமிக் கோரின் அழைப்புக்குத் திரண்டுவர இளைஞர் உள்ளார் அஞ்சாத சிங்கத்தின் கூட்டம் அன்னர்!