பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5? நாச்சியப்பன் கல்லூரிப் படிகளிலே தமிழ்ஒ லித்தால் கணக்கின்றி விஞ்ஞானப் புதுமை தோன்றும்! கொல்லருலைக் களங்களிலே தமிழ்ஒ வித்தால் குவிகின்ற பொருள்களிலே உறுதி தோன்றும்! சொல்லாடும் அறமன்றில் தமிழ்ஒ வித்தால் தோற்ருேடும் பழிபாவம்! அறம் நிலைக்கும்! நல்லாராம் தமிழறிஞர் வழி நடந்தால் நாடெல்லாம் முன்னேறும் இதுமெய் மெய்யே! துறைதோறும் உன்னெழிலைக் குறைப்ப தேதம் தொழிலாகக் கொண்டிருந்தோர் சூழ்ச்சி யாலே பிறைதோறும் மறைந்துவரும் மதியைப் போலே பெருமாட்டி உன் ைெளிதான் குறையக் கண்டே மறைதோறும் மறைதோறும் மனம்பு ழுங்கி மாண் டொழிந்தார் தொண்டர்பலர்! உன்னைச் சேர்ந்த கறை நீக்கி முழுநிலவாய்க் காண்ப தற்கே கழகங்கள் பலகண்டார் வீரர் பல்லோர்! தீங்குடையான் ஒழிந்துவிட்டால் இன்னல் தீரும் திருவுடைய தாகுமிந்த நாடே என்றிங்(கு) ஏங்கியவர் மனங்களிக்கப் பரங்கி கப்பல் ஏறிவிட்டான் என்ருலும் விட்டுச் சென்ற ஆங்கிலந்தான் கற்றவர்கள் உள்ளந் தன்னை ஆட்கொண்டு நாட்டுக்குச் செய்யும் கேடு வான் பெரிது வான்பெரி தே! இந்த நாட்டின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் முட்டுக் கட்டை! போற்றிசெயும் கோயிலிலே, பாட்டுப் பாடும் புலவர்களின் அரங்கத்தே, அறமன் றத்தே, ஆற்றல் பெறும் கல்லூரிக் கூடம் தன்னில், அரசுபணிச் செயலகத்தே, திரும ணத்தே,