பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 57 பொங்கல் திருநாள் செங்கதிர் தெற்கு நோக்கித் திரும்பிடும்; வாடை போக எங்கணும் தென்றல் வீசும்; இளம்பச்சை நெல்மு திர்ந்து தங்கமாய் வண்ணம் மாறித் தமிழரின் களஞ்சி யத்தில் தங்கிட வந்து சேரும் தைமுதல் நாளே வாழி ! உழவர்கள் ஆண்டு முற்றும் உழைத்ததன் பலனை ஈந்தாய் ! பழையதோர் வீடும் வெள்ளைப் பாங்குறச் செய்தாய் ! எங்கும் எழில்பெறும் கோலம் காட்டி இல்லங்கள் தோறும் நல்ல அழகிய பெண்க ளுக்கோ அவசர வேலை வைத்தாய் ! வீட்டிலே பயன்படாமல் வீனுறக் கிடக்கு மந்த ஒட்டைகள் கிழிசல் எல்லாம் ஒதுக்குவார்; பழமை போக்கி ஏட்டிலே புதுமை சேர்க்கும் எழுத்தாளர் செயலைப் போலே கூட்டுவார் மெழுகு வார்.நற் கோலமிட் டழகு சேர்ப்பார் !