பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நாச்சியப்பன் அடுப்பிலும், அடுப்பில் உள்ள அழகிய பானை மீதும், எடுப்புற வீட்டு வாசல் எதிரிலும், கூடத் துள்ளும் தடுப்பவர் தடுத்த போதும் தம்பெரும் குணத்தி ளுலே கொடுப்பவர் உள்ளம் போலே குதுகலம் சேர்க்கும் கோலம் ! தோரணம் வாயி லெங்கும் தொங்கிடக் கண்டேன்; நாட்டில் பூரண இன்ப மெங்கும் பொங்கிடக் கண்டேன்; நல்ல ஆரணங் குகளோ பொங்கல் அமுதினேப் படைக்கக் கண்டேன் ! பாரணங் கோ மலர்ந்து பளிச்செனச் சிரிக்கக் கண்டேன் ! கன்றுகள் துள்ளிப் பாயும் காளைகள் வண்ணக் கொம்பால் கொன்றிடப் பாய்வ தைப்போல் குதித்தோடும் இளங் காளைகள் சென்றுவால் முறுக்கிக் கொண்ட செருக்கடக் கிக்க முத்தில் ஒன்றிய மாலை பற்றி உவக்குமோ ராட்டங் கண்டேன் ! ஆட்டமும் பாட்டும் இன்ப ஆக்கமும் சேர்க்க வந்தாய் கூட்டமும் விழாவும் சேர்த்துக் குறள் தரு தமிழ் வளர்க்கும்